எடுக்க எடுக்க தங்கம்... காங்கோ தங்க மலை.. அள்ளிச் செல்லும் மக்கள் !

0

காங்கோ மக்களாட்சிக் குடியரசு அல்லது கொங்கோ மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of the Congo, பிரெஞ்சு: République démocratique du Congo) ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். 

எடுக்க எடுக்க தங்கம்... காங்கோ தங்க மலை.. அள்ளிச் செல்லும் மக்கள்
இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். இந்த நாட்டில் தெற்கு கிவு மாகாணத்தின் லுகிகி என்ற கிராமத்தில் இருக்கும் 

மலை ஒன்றில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது காணப்படுவதாக உள்ளூர் வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செய்தி கிராமம் முழுவதும் தீயாய் பரவியதை யடுத்து, கோடாரி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைப்பகுதிக்கு மக்கள் விரைந்தனர். 

அங்கு மண்ணை தோண்டி போட்டி போட்டுக் கொண்டு மக்கள் தங்கத்தை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின் அதனை பையில் போட்டு எடுத்துக் கொண்டு சென்றனர். 

எடுக்க எடுக்க தங்கம்... காங்கோ தங்க மலை

மக்கள் அவர்கள் எடுத்த அந்த மண்ணை தண்ணீரில் போட்டு, தங்க தாதுக்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்தனர். இதனை யடுத்து, பத்திரிகையாளர் ஒருவர் இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 

இது சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், இது குறித்து தகவல் அரசுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து அப்பகுதி அந்த மலையில் மண்ணை தோன்றுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். 

மேலும் இந்த மலை முழுவதும் தங்கம் இருக்கலாம் என்று எண்ணி, மலையை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப் பட்டுள்ளனர்.

ஆனால், மக்கள் தங்களுக்கு வேண்டிய அளவு தங்கத்தை பெயர்த்து எடுத்து சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலே இருக்கும் காணொளியில் தங்கம் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்ட மலைப் பகுதியில், மக்கள் மண்ணை வெட்டி எடுப்பதையும், 

அதை சுத்தம் செய்து தங்கத்தை பிரித்தெடுப்பதையும் பார்க்க முடிகிறது.  மக்கள் மண்ணைக் கழுவி சுத்தம் செய்ய செய்ய தங்கம் கிடைக்கிறது. 
தங்கத்தை பறிமுதல் செய்ய
மக்கள் எடுத்த தங்கத்தை மீண்டும் பறிமுதல் செய்ய, காங்கோ அரசு அப்பகுதிக்கு காவலர்களை அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி சுமார் 50 கிலோ மீட்டருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதாக தெற்கு கிவு சுரங்க அமைச்சர் வெனன்ட் புருமே முஹிகிர்வா கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)