இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களை பாராட்ட மனமின்றி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி உள்ளார். 

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட யுவராஜ் !
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. 

இந்த நிலையில் நேற்று நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வென்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதாக இங்கிலாந்தை வீழ்த்தியது. 

இந்த வெற்றிக்கு இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்தது தான் காரணம். பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருந்தது. 

இதை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி வீரர்கள் அக்சர், அஸ்வின் இரண்டு பேரும் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். 

இந்திய அணியின் இந்த வெற்றியை பலரும் பாராட்ட தொடங்கி உள்ளனர். தொடர்ந்து மூன்று முறை அக்சர் 5 விக்கெட் எடுத்தது, 

அஸ்வின் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தது என்று இந்திய அணி வீரர்களின் சாதனையை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

ஆனால் இந்திய வீரர்களை பாராட்ட மனமின்றி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி உள்ளார். அதில், இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிந்து விட்டது. 

இது நல்ல டெஸ்ட் போட்டியா என்ற சந்தேகம் உள்ளது. ஹர்பஜன், அணில் கும்ப்ளே இந்த பிட்சில் பவுலிங் செய்திருந்தால் அவர்கள் 1000 அல்லது 800 விக்கெட்டுகளை எடுத்து இருப்பார்கள். 

இருந்தால் நன்றாக பவுலிங் செய்த அக்சர், அஸ்வின், இஷாந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று யுவராஜ் குதர்க்கமாக டிவிட் செய்துள்ளார். 

இந்திய வீரர்களை பாராட்ட மனமே இன்றி அவர் பாராட்டி உள்ளார். யுவராஜின் இந்த டிவிட் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நீங்கள் இதற்கு பாராட்டாமல் இருந்திருக்கலாம். 

முன்னாள் இந்திய வீரர்களை பாராட்டுகிறேன் என்று இளம் இந்திய வீரர்களை தேவையின்றி இகழ்ந்து பேச கூடாது என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்திய அணி வென்று விட்டது. நாம் வெளிநாட்டு பிட்ச்களில் நன்றாக ஆடுகிறோம். 

அப்படி இருக்கும் போது அதை பாராட்டுவதை விட்டு விட்டு இப்படி பேச கூடாது என்று யுவராஜ் சிங்கிற்கு எதிராக பலரும் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.