ஆபாச படம் பார்த்தால் விவரங்கள் காவல்துறைக்கு சென்று விடும் !

0

போஸ்கோ சட்டப்படி, குழந்தைகளிடம் பாலியல் தொடர்பான சமிக்கை செய்தல், படங்களை காட்டுதல், தொடுதல், சீன்டல்கள், தொந்தரவு செய்தல் போன்றவை  தண்டனைக்குரிய குற்றமாகும். 

ஆபாச படம் பார்த்தால் விவரங்கள் காவல்துறைக்கு சென்று விடும்
இனி ஒருவர் ஆபாச படம் பார்த்தால் உடனே அந்த நபரின் விபரங்கள் அனைத்தும் நேரடியாக காவல்துறைக்கு சென்று விடும்.

நாட்டில் இணையத்தை பயன்படுத்தி பல தவறுகளும் மோசடிகளும் நடப்பது அனைவருக்கும் பெரிய தலைவலியாக மாறிவிட்டது. 

சைபர் கிரைம் என்ற ஒரு பிரிவு கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறது என்றாலும், அதற்கு முன்னதாக ஏற்படும் சேதங்களை சரி செய்வது மிகவும் சிக்கலானது தான். 

பல விஷயங்களில் பிரச்சனை சரியான பிறகும் சம்பந்தப் பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்பட முடியாத ஒன்றாக மாறி விடுகிறது.

அதனால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரப்பிரதேச மாநில காவல்துறை நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. 

படுக்கையிலும் லேப்டாப் பயன்படுத்துபவரா? இத படிங்க !

அதன்படி ஒருவர் ஆன்லைனில் ஆபாசம் சார்ந்த தகவல்களை தேடினால், அந்த நபரின் விவரங்கள் காவல்துறைக்கு நேரடியாக சென்று விடும். 

இந்தப் பிரச்சனையின் ஆணி வேரையே சரி செய்வதற்கு உதவியாக இருக்கும். ஆபாச தகவல் தேடலில் விவரங்கள் நேரடியாக காவல்துறைக்கு தெரிந்து விடும்.

அதன் பிறகு உடனே 1090 என்ற எண்ணில் இருந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு எஸ்எம்எஸ் வரும். 

இவ்வாறு எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் உத்திரப்பிரதேச அரசும் காவல் துறையும் இணைந்து வித்தியாசமான முயற்சியில் எடுத்துள்ளது. 

இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மற்ற மாநிலங்களிலும் அமலாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)