வெளியே வந்ததும் திரும்பும் பக்கமெல்லாம் சசிகலாவுக்கு சிக்கல் !

0

ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

வெளியே வந்ததும் திரும்பும் பக்கமெல்லாம் சசிகலாவுக்கு சிக்கல் !
இது பற்றி 24ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

அதன் பிறகு டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவின் இதய துடிப்பு நின்று விட்டதாகவும், உடல் நிலை மோசமடைந்திருப்ப தாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

மலையாளிப் பெண்கள் அழகாக இருக்க காரணம்?

ஜெயலலிதாவுக்கு பிறகு, புது சிக்கல் ஒன்று கிளம்பி உள்ளது. இது அமமுகவுக்கும் சசிகலாவுக்கும் பெருத்த இடியாய் வந்து விழுந்துள்ளது. 

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்த சசிகலா ஜெயலலிதா பயன்படுத்திய காரில் தான் வந்தார். 

அப்போது மட்டுமல்ல, அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன போதும் ஜெ.காரை பயன்படுத்தினார்.

சசிகலா சென்னைக்கு வரும் போது அவரை வரவேற்க, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கார்களும் இடம் வந்தனவாம். இது தான் இப்போது இவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. 

தில்குஷ் பிரியாணி செய்வது எப்படி?

ஜெயலலிதாவின் பெயரில் மாருதி ஜிப்சி, டிராக்ஸ் ஜீப், டாட்டா- சியரா, ஸ்வராஜ் மஸ்தா வேன் மாருதி 800, கண்டசா, டிராக்ஸ் ஜீப், ஸ்வராஜ் மஸ்தா வேன் ஆகிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றை பல்வேறு வேட்பு மனுக்களில் அவரே குறிப்பிட்டிருந்தார். அதே போல, ஜெயா பப்ளிகேஷன்ஸ், "நமது எம்ஜிஆர்", ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ், 

மெட்டல் கிங், அதிமுக ஆபீஸ் பெயர்களில் உள்ள ஏராளமான வாகனங்களிலும், ஜெயலலிதாவுக்கும் பங்கு இருந்தது. இந்த வாகனங்களில் ஒன்றில் தான் சசிகலா வந்தாராம். 

திரும்பும் பக்கமெல்லாம் சசிகலாவுக்கு சிக்கல்

எனவே, ஜெயலலிதா பயன்படுத்திய வாகனங்களை இனி யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் அப்படி பயன்படுத்தினால் சட்ட விரோதம் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

மேலும் மோட்டார் வாகனச்சட்டப்படி, ஒருவர் இறந்த பிறகு, அவர் பெயரில் உள்ள வாகனங்களை, 3 மாதத்துக்குள் அவர்களுடைய வாரிசுதாரருக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டுமாம். 

ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால், அதற்கான ஒப்புதல் கடிதத்தை பிறரிடம் பெற வேண்டுமாம். ஒரு வேளை அப்படி பெயர் மாற்றம் செய்யப் படவில்லையானால், 

அந்த வாகனத்தை பயன்படுத்துவது மோட்டார் வாகனச் சட்டப்படி சட்ட விரோதம் ஆகும். இது தான் மோட்டார் வாகனச்சட்ட விதி.

தெய்வீக சக்தி கொண்ட மலைப்பாம்பை கடத்திய மக்கள் !

ஆனால், சசிகலாவை வரவேற்ற வாகனங்கள் எதுவும் ஜெயலலிதாவின் பெயரில் இல்லை, மாறாக அது ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது. 

அந்த நிறுவனத்தில் தான் சசிகலாவும் ஒரு பங்குதாரர் என்பதால், அந்த வண்டிகளை பயன்படுத்தலாம் என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்.

இதையடுத்து, ஜெயலலிதா பெயரில் உள்ள மற்ற வாகனங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன? 

அவை வழக்கம் போல் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

எல்லா பக்கமும் சசிகலாவுக்கு சிக்கல் !

ஒரு வேளை சசிகலாவோ, அவருடைய குடும்பத்தினரோ, ஜெயலலிதா பெயரில் உள்ள வாகனங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சசிகலா தீவிரமான அரசியலில் இறங்கும் நேரத்தில், அதிமுகவை கைப்பற்ற போவதாக முடிவில் உள்ள நேரத்தில், 

நான் தான் பொதுச்செயலாளர் என்பதை சொல்லாமல் சொல்லி சென்னை வந்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் கார் பயன்படுத்தும் விஷயத்தில் அடுத்து என்ன நடக்குமோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒன் இந்தியா

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings