நோயாளிகளுக்கு ஆன்டிபாயாடிக் மருந்துகள் கொடுத்து தொற்றை சரி செய்கின்றனர். சில சமயங்களில் 1 அல்லது 2 வருடங்கள் வரை கூட சிகச்சை அளிக்கப்படுகிறது. 

விப்பிள் நோய்க்கான சிகிச்சைகள் என்ன?
மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படாமல் இருந்தால் ஆன்டி பயாடிக் மருந்துகளைக் கொண்டே சரி செய்து விடலாம்.

ஆன்டி பயாடிக் மருந்துகள் மூலம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை அளிப்பதோடு, மூளை மற்றும் 

நரம்பு மண்டலத்திலும் பாக்டீரியாக்கள் நுழைந்து இருந்தால் அதற்கும் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

பென்சிலின் மருந்துகள்

விப்பிள் நோய்க்கு பென்சிலின் மருந்துகள்

முதல் 2-4 வாரங்களுக்கு செஃபிரியாக்ஸோன் அல்லது பென்சிலின் மருந்து கொடுக்கப்படுகிறது. 

சல்பாமெதாக்ஸ்ஸோல் - டிரிமெத்தோ பிரிமின் மூலம் போன்ற நீண்ட நாள் ஆன்டி பயாடிக் மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. 1-2 வாரங்களில் அதன் அறிகுறிகள் குறைய ஆரம்பிக்க தொடங்கி விடும்.

ஊட்டச்சத்து மாத்திரைகள்

விப்பிள் நோய்க்கு ஊட்டச்சத்து மாத்திரைகள்

இந்த விப்பிள் நோயால் ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுவதால் ஊட்டச் சத்துகளின் குறைபாடு ஏற்படும். 

அதற்கு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற மாத்திரைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விளைவுகள்

விப்பிள் நோய்க்கான சிகிச்சை

சிறுகுடலின் சுவர் பாதிப்படைவதால் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். 

இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டால் சோர்வு, பலவீனம், மூட்டு வலி, உடல் எடை இழப்பு ஏற்படும்.

இது தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவக் கூடிய நோயாகும். எனவே இதை ஆரம்பத்திலயே கண்டறிவது நல்லது. 

நோயின் தீவிரம் அதிகமானால் இறப்பு நேரிடும். தொற்றை அசால்ட்டாக விட்டால் அது நமது மத்திய நரம்பு மண்டலத்தையே பாதித்து விடும்.