குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த இலவசம்.. படிங்க ... !

0

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த இலவசம்
விரைவில் அறிவிப்புகள் வெளி வரலாம் என்பதால் கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. அதே நேரத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது.

பிரச்சாரத்தின் போதே முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம், கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன்கள் ரத்து,

அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து, அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன் பணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியானது.

இந்நிலையில் அதிமுக தரப்பில் தேர்தல் அறிக்கும் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு பைக் வாங்க 20%  மானியம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 24 இன்ச் எல்.இ.டி. டிவி, 

செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் என்ற அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும், 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப் டாப், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் என அதிமுக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அது மட்டுமின்றி, கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால நிதியுதவி உயர்த்துவது, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ஆண்ட்ராய்டு செல்போன், 

வீடுகளுக்கு 150 யூனிட் வரை இலவச மின்சாரம் போன்ற பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் இடம் பெறக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் திமுகவும் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

ஏற்கனவே மு.க. ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தேர்தல் அறிவிக்கையில் புதிய அறிவிப்புகள் இடம் பெறக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

இதனால் தேர்தல் அறிக்கையிலும் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings