வீட்டு கொல்லைப்புறத்தில் இருந்து வாயுவை எடுத்து சமைக்கும் குடும்பம் !





வீட்டு கொல்லைப்புறத்தில் இருந்து வாயுவை எடுத்து சமைக்கும் குடும்பம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

கேரளாவில் உள்ள கிராமம் ஒன்றில் கிணற்றில் இருந்து கேஸ் வெளியேறி உள்ளது அதை வைத்து 10 வருடங்களாக உணவு சமைத்து வந்த குடும்பம் தற்போது பிரபலமாகி வருகிறது.

வீட்டு கொல்லைப்புறத்தில் இருந்து வாயுவை எடுத்து சமைக்கும் குடும்பம்
ரமேன்சன், கேரள மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருகிறார். அவரது மனைவி ரத்தினம். இந்த தம்பதியினர் வசித்த பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

அதனால், இவர்கள் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வந்தனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சியை இந்த குடும்பத்தினர் மேற்கொண்டு வந்தனர். 

அதன் விளைவாக தங்களின் வீட்டிலேயே கிணறு தோண்ட முடிவு செய்தனர். அவர்களின் திட்டத்தின் படி கிணறு தோண்டியுள்ளனர்.

இந்தக் கிணற்றில் உள்ள தண்ணீரின் நிறம் மற்ற கிணற்றில் உள்ள சாதாரண நீரின் நிறத்தை விட சற்று மாறுப்பட்டு இருந்துள்ளது. 

இதனால், இந்த குடும்பத்தினர் இந்த கிணற்றை மூடி விட்டு, அதன் அருகில் வேறு ஒரு கிணறு வெட்டினர். அந்த கிணற்றில் இருந்து சமையல் எரிவாயு போல வாடை வந்ததுள்ளது.

அதனை வைத்து சோதனை செய்வதற்காக அந்த கேஸ் வைத்து சமையல் செய்துள்ளனர். அவர்கள் ஆச்சர்ய படும் விதமாக அத கேஸ் வைத்து சமையல் செய்ய முடிந்துள்ளது. 

இதனால், அந்த தம்பதிகள் ஒரு குழாய் மூலம் கிணற்றில் இருந்த வாயுவை, வீட்டு சமையலறைக்கு கொண்டு வந்தனர்.

முட்டையை சரியான பதத்தில் வேக வைக்கத் தெரியுமா?

அதன் மூலமாக அடுப்பை இணைத்து அதில் சமையல் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இது போன்று அவர்கள் சமையல் செய்து வருகின்றனர்.

இந்த தகவல் பற்றி அறிந்து அக்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஆச்சரியத்துடன் ஒன்று கூடி வந்து இவர்கள் சமைப்பதை பார்த்து செல்கிறார்களாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)