குக் வித் கோமாளி புகழ் இயக்குனர் ஹரியின் திரைப்படத்தில் !

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியில் கலக்கி வருபவர் புகழ். அவருக்கு ரசிகர்களும் சமீப காலமாக அதிக அளவு உருவாகி இருக்கிறார்கள். 

குக் வித் கோமாளி புகழ் இயக்குனர் ஹரியின் திரைப்படத்தில் !

குக் வித் கோமாளியின் அவர் செய்யும் சேட்டைகளை பார்த்து விழுந்து விழுந்து ரசிகர்கள் சிரித்து வருகிறார்கள்.

வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

கோலா குளிர்பானங்களை குடிப்பதால் என்னாகும்?

அதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை ஷகிலா, நடன இயக்குனர் பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம் பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் 

கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

மேலும் சோஷியல் மீடியாவில் குக் வித் கோமாளி நடிகர் அஸ்வின், பாடகி ஷிவாங்கி உள்ளிட்டோரை மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

குக் வித் கோமாளி புகழ் இயக்குனர் ஹரியின் திரைப்படத்தில் !

இந்நிலையில் தற்போது புகழ் சினிமாவில் நுழைய இருக்கிறார். அவர் அருண் விஜய்யின் அடுத்த படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 

இந்த படத்தினை இயக்குனர் ஹரி இயக்குகிறார். 

ஹரி இயக்கிய சிங்கம் உள்ளிட்ட படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருந்த நிலையில் அடுத்து அவர் இயக்கும் படத்தில் புகழ் இணைந்து இருப்பது எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.

கொழுப்பு சத்தால் அவதிப்படுபவரா? இந்த எண்ணெயை பயன்படுத்தவும் ! 

புகழ் இந்த படத்தில் நடிப்பதை அதிகாரபூர்வமாகி போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்திருக்கிறார்கள். இதை படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. 

மேலும் புகழுக்கு வெள்ளித்திரை  வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings