12 ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு !

0

தமிழகத்தில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான கால அட்டவணையை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

12 ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஆண்டு மார்ச் இறுதி வாரம் முதல் மூடப்பட்டன. 

வெள்ளையாக மாறுவதற்கு இதோ சில எளிய வழிகள் !

படிப்படியாக, கொரோனா தொற்று பரவல் குறைந்ததை யடுத்து, கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கமாக மார்ச் முதல் வாரத்தில் பொதுத் தேர்வு தொடங்கும் என்பதால், 

இந்த ஆண்டு 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது தொடங்கும் பொதுத் தேர்வு கால அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில், 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கால அட்டவனையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

டிக்டாக் இலக்கியா கதாநாயகியாக அறிமுகம் ஆகும் த்ரில் படம் !

அதன்படி, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை:

1. மே 3- மொழித்தாள்,

2.மே 5- ஆங்கிலம்

3.மே 7: கணிணி அறிவியல், உயிரி அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள்

4.மே 11- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்

5.மே 17- கணிதம், விலங்கியல்

6.மே19- உயிரியியல் வரலாறு

7.மே 21- வேதியியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

புரதம் நிறைந்த மத்தி மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ! 

12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)