சசிகலா வெளியே வந்ததும் என்ன நடக்கும் தெரிலையே... !





சசிகலா வெளியே வந்ததும் என்ன நடக்கும் தெரிலையே... !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

சசிகலா வெளியே வந்ததும் என்ன நடக்கும் என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.  

சசிகலா வெளியே வந்ததும்
அன்று ஜெயலலிதா நினைவிடத்தில்  அடித்து சபதம் செய்து விட்டு கோபம், கொந்தளிப்புடன் சிறைக்குப் போன சசிகலா இன்று வெளியே வரும் போது அவை அனைத்தும் அதி பயங்கரமாக மாறிப் போயிருக்கும் என்று  ஊகிக்கிறார்கள்.

அது உண்மையா இல்லையா என்று வந்தால் தான் தெரியும். இதனாலேயே பலரும் அவரின் வருகையை அச்சத்தோடு எதிர் நோக்கியுள்ளனர். 

காரணம், சசிகலா ஜெயிலுக்குப் போவதற்கு முன்பும், போன பின்பும் நடந்த துரோகச் செயல்கள் அத்தனை இருக்கிறது. 

அன்று சமாதியில் அடித்து சபதம் செய்து விட்டுப் போன சசிகலா வெளியே வந்ததும் பலமான மரண அடியாக திருப்பி கொடுக்கப் போகிறாரா என்பது தான் அமமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

சசிகலா வெளியே வந்ததும் தான் இருக்கிறது கச்சேரி என்று சொல்கிறார்கள். சசிகலா மனதில் இப்போது இருப்பது முதல்வர் எடப்பாடியார் மட்டுமே. 

ஆனால் சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்று அவர் திட்டவட்டமாக சொல்லி விடவும், அதை சசிகலா எதிர் பார்க்க வில்லையாம். 

அதிர்ச்சியாகி விட்டாராம். முதல்வர் எடப்பாடியாருக்கு பாடம் கற்றுக் கொடுக்கப் போகிறார் சசிகலா என்று தான் பரபரப்பாக சொல்கிறார்கள்.

பலத்த வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும், சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கும் நாளிலேயே அதிமுகவை அதிர வைக்கும் பல்வேறு ஏற்பாடுகளும் கூட செய்து முடித்து விட்டார்களாம். 

அதாவது பல அமைச்சர்கள், பல எம்எல்ஏக்கள் என அதிமுகவின் பல முக்கிய தலைகள், சசிகலா பக்கம் அன்றைய தினம் அணிவகுக்கும் என்று சொல்கிறார்கள்.

மழைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க சில வழிகள் !

அமமுக உடைந்த போது 18 பேர் தினகரன் பக்கம் ஆதரவாக வந்தனர். இந்த முறை அதை விட 2 மடங்கு வெளியே வருவார்கள் என்று சொல்கிறார்கள். 

சசிகலா வந்ததும் என்ன நடக்கும்

ஒரு வேளை பெருமளவில் சசிகலா பக்கம் அதிமுக விலிருந்து எம்எல்ஏக்கள் திரண்டால், தமிழகத்தில் ஆட்சிக்கும் பேராபத்து ஏற்படும்.

ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது குழப்பம் பெரிதானாலோ உடனடியாக ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரவும் டெல்லி யோசித்து வருவதாக இன்னொரு தகவல் உலா வருகிறது. 

கல்லீரல் பற்றி அறிந்து கொள்ளுங்கள் !

அப்படி நடந்தால் சட்டசபைத் தேர்தலை தமிழ்நாடு, ஆளுநர் ஆட்சியின் கீழ் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். 

அது பாஜகவுக்கு பலன் தரும். கூடவே சசிகலாவுக்கும் எளிதாக அமையும். சிக்கலை சந்திக்க போவது என்னவோ அதிமுகவும். கூடவே திமுகவும் தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)