சென்னையில் நாளை முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது !

0

நாளை முதல் சென்னையில் இயக்கப்படும் 650 மாநகர ஒப்பந்தம் தண்ணீர் லாரிகள் இயக்கப்படாது என மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது
கடுமையான டீசல் விலை ஏற்றத்த்தால் நஷ்டத்தில் எங்களால் லாரியை இயக்க முடியாது என மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகனங்களுக்கு சொந்தக்காரர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். 

குறிப்பாக லாரி உரிமையாளர்கள் கிடைக்கும் லாபத்தில் பாதிக்கும் மேல் டீசலுக்கே போய் விடுவதாகவும் மற்ற செலவிற்கு கூட பணம் இல்லை என்றும் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென சென்னையில் இயக்கப்படும் 650 மாநகர ஒப்பந்த தண்ணீர் லாரிகள் இயக்கப்படாது என டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அருமையான மட்டன் கீமா ரொட்டி செய்வது எப்படி?

இதனால் சென்னையில் வழக்கமாக விநியோகம் செய்யப்படும் தண்ணீர் சேவை பாதிக்கும் என்று கூறப்படுகிறது

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)