நாட்டைக் காப்பது மட்டுமன்றி பெண்களையும் காக்கும் ராணுவ வீரர்கள் !

0

எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பது மட்டுமன்றி உள்நாட்டு மக்களையும் காப்பது இராணுவ வீரர்களின் கடமை என்ற வகையில்,

நாட்டைக் காப்பது மட்டுமன்றி பெண்களையும் காக்கும் ராணுவ வீரர்கள் !
பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த இளம்பெண் ஒருவரை 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்ற ராணுவ வீரர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும்பனி பொழிந்து வருவதால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

சாலைகளில் கடும்பனி தொடர்ந்து இருப்பதால் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் கடும் பனியால் பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் இளம்பெண் ஒருவர் தவித்துக் கொண்டு இருப்பது குறித்த தகவல் ராணுவத்திற்கு கிடைத்தது. 

இதனை அடுத்து அந்த மருத்துவமனைக்கு சென்ற ராணுவ வீரர்கள் அந்த பெண்ணை ஆறு கிலோ மீட்டர் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கியபடி அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தனர்.
ஓட்ஸ் காய்கறி சூப் செய்வது எப்படி?

இது குறித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

இளம் பெண்ணை தூக்கி செல்லும் போது அந்தப் பெண்ணின் மேல் பனிபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் குடை பிடித்துக் கொண்டே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)