முழங்கையை இடித்துக் கொள்ளும் போது ஷாக் அடிக்கும் உணர்வு வருவது ஏன்?

0

இந்த நிகழ்வு எல்லாருக்கும் நடக்குற ஒன்னு தான். பள்ளிக்கூட காலத்துல பசங்களோட முழங்கை எலும்புல சுண்டி விட்டு விளையாடுவோம். நான் அப்டியே ஷாக் ஆயிட்டேங்குற ரியாக்ஷன் அப்ப வரும்.

முழங்கையை இடித்துக் கொள்ளும் போது ஷாக் அடிக்கும் உணர்வு வருவது ஏன்?
நாம் ஏதாவது முக்கியமான வேலை செஞ்சிட்டிருக்கும் போது எங்கயாவது கை முட்டியை இடித்துக் கொண்டால் ஷாக் அடிக்கிறதோட இல்லாம பைனலா அப்டியே சூடாகும். 

ஏதோ நெருப்ப கையில எடுத்த மாதிரி இருக்கும். அதை பற்றி இந்த செய்தில தெரிந்து கொள்வோம்.

வேடிக்கையான எலும்பு (Funny Bone):

ஷாக் அடிக்கும் உணர்வு

இந்த இடம் Funny Bone என்று அழைக்கப்படுகிறது. இந்த "எலும்பு" உண்மையில் உல்நார் நரம்பு (ulnar nerve) என்று அழைக்கப்படும் ஒரு நரம்பின் நீண்ட கொடியாகும்.

இது நமது கழுத்திலிருந்து தொடங்கி, தோள்பட்டை, பைசெப்ஸ் (Biceps) முன்கை ஆகியவற்றின் மூலம், மணிகட்டுக்குள் நுழைந்து இறுதியாக மோதிர விரலின் பாதியில் மற்றும் சுண்டு விரலில் முடிவடைகிறது.

நீண்டு செல்லும் இந்த நரம்பு காணப்படும் பகுதி 'உல்நார்' என்றும், நரம்பு "உல்நார் நரம்பு" என்றும் அழைக்கப்படுகிறது.

PF என்றால் என்ன? தொிந்து கொள்ள

இதன் கூர்மையான, நீடித்த விளிம்பு முழங்கையின் எலும்போடு இணைந்து சற்று கீழ்ப்புறமாக செல்கிறது.உல்நாருடன் பூட்டப்பட்ட எலும்பு ஹியூமரஸ் ஆகும். இது நமது முழங்கைக்கு மேலே உள்ள எலும்பு ஆகும்.    

நம் உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பும் தசைகளால் மூடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உல்நார் நரம்பின் நிலைமையும் அப்படித் தான். இது நமது பைசெப்ஸ், முன்கை, மோதிர விரல் மற்றும் சுண்டுவிரல் போன்றவற்றில் தசைகளால் பாதுகாக்கப் படுகிறது.

ஹியூமரஸ்க்கும் (humerus) முன்கைக்கும் இடையில் ஒரு வெற்றிடம் உள்ளது, இது கியூபிடல் சுரங்கம் (cubital tunnel) என்று அழைக்கப் படுகிறது.

வேடிக்கையான எலும்பு - Funny Bone

இந்த கியூபிடல் நரம்பு எளிதாக பாதிக்கப்படக்கூடியது. எப்படி யெனில் இது கியூபிடல் சுரங்கப்பாதை வழியாக செல்லும் போது, ​​அது தோல் மற்றும் சில கொழுப்புகளால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.

நாம் தெரியாமல் எங்காவது இடித்துக் கொள்ளும் போது இந்த பாதுகாப்பற்ற நரம்பு, எலும்போடு சேர்த்து அழுத்தப்படுகிறது. 

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்க !

இதனால் அழுத்தப்பட்ட உல்நார் நரம்பு வலியின் அலைகளைத் (waves) தூண்டி “மின்சார அதிர்ச்சியை” வெளியிடுகிறது. 

இவ்வாறு ஏற்படும் மின் அதிர்ச்சியானது நரம்பின் மற்ற பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது. அதாவது, முழங்கை பகுதியிலிருந்து முன்கை, மோதிரவிரலின் பாதி, சுண்டு விரல் வரை இது கடத்தப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)