ஆனந்த் மஹிந்திரா தனது நிறுவன காரை நட்டு உட்பட 6 வீரர்களுக்கு பரிசளித்தார் !





ஆனந்த் மஹிந்திரா தனது நிறுவன காரை நட்டு உட்பட 6 வீரர்களுக்கு பரிசளித்தார் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

ஆஸ்திரேலிய அணியை இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி வீழ்த்தியது. தொடரில் பல அனுபவ வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில், ஐந்து வீரர்கள் டெஸ்ட் அணியில் அறிமுகம் செய்யப்பட்டனர்.  

ஆனந்த் மஹிந்திரா தனது நிறுவனத்தின் காரை நட்டு உட்பட 6 வீரர்களுக்கு பரிசளித்தார் !
அவர்களுக்கு சந்தையில் வந்துள்ள தன் கம்பெனியின் புத்தம் புதிய காரை பரிசளிக்க முடிவு செய்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. 

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டத்தின் 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் விறுவிறுப்பாக நடைபெற்றது. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே தொடரில் 20 வீரர்களை பயன்படுத்தியது இந்திய அணி. 

கர்ப்பிணி பெண்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் ! 

அனுபவ வீரர்கள் பலர் காயத்தால் வெளியேறிய நிலையில் ஷுப்மன் கில், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் நடராஜன் என ஐந்து இளம் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இந்த ஆட்டத்தில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதில் இரு அணிகளும் முனைப்பாக இருந்தன.

4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவின் வெற்றி இலக்கு 328 ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. 

இந்நிலையில் களமிறங்கிய இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் 91 ரன்களும், புஜாரா 56 ரன்களும் எடுத்து அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினர். 

நட்டு உட்பட 6 வீரர்களுக்கு பரிசளித்தார்

இந்நிலையில் நேற்று மழை காரணமாக ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்த ஆட்டத்தில் ஆரம்பம் மெதுவாக சென்றாலும் அதிரடியாக களம் இறங்கிய வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட் ரன்களை கடகடவென குவிக்க தொடங்கினர். 

இடையில் வாஷிங்டன் சுந்தர் அவுட் ஆனாலும் நிதானமாக விளையாடிய ரிஷப் பண்ட் நாட் அவுட் ஆகாமல் 89 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். 

நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?

டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் ஒருநாள் தொடர் போல விருவிருப்பாக சென்ற இந்த தொடரில் இந்தியா வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இளம் வீரர்க்ளைக் கொண்ட இந்திய அணியின் வெற்றிக்கு இளம் நட்சத்திரங்கள் நடராஜன், ஷர்துல் தாகூர், சிராஜ், வாஷிங்டன் சுந்தர்,  நவ்தீவ் சைனி மற்றும் கில் ஆகிய 6 பேர் முக்கிய பங்காற்றினர்.

எனவே இவர்களுக்கு பlவேறு துறையினர் மற்றும் ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்து வரும் நிலையில் இந்த ஆறு வீரர்களும் எழுச்சியின் அடையாளம், 

ஆனந்த் மஹிந்திரா

இவர்கள் அனைவருக்கும் ஊக்கம் அளித்து இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா தனது நிறுவனத்தின் புதிய வரவான தார் (Thar SUV) எனும் காரை அவர்களுக்கு பரிசளிக்க முடிவு செய்துள்ளார். 

சொந்த செலவில்.. அதிலும் இந்த கார்களை தன் சொந்த செலவில் அளிப்பதாகவும், நிறுவனத்தின் கணக்கில் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி?

அந்த ஆறு வீரர்களின் செயல்பாட்டை குறிப்பிட்டு அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)