புரவி புயல் செல்லும் சுற்றுலா !

0

தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்ததை அடுத்து அதற்கு புரெவி எனப் பெயரிடப்பட்டது.

புரவி புயல் செல்லும் சுற்றுலா !

இந்த புரெவி புயல் நேற்று இரவு இலங்கையின் திரிகோண மலைக்கு வடக்கே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன் படியே நேற்று இரவு திரிகோணமலை அருகே புயல் கரையைக் கடந்தது. 

அதனைத் தொடர்ந்து தற்போது பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் இருக்கும் புரெவி புயல், இன்று பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கு இடையே புயலைக் கடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கர்ப்பிணிகள் எப் போது பயணம் செய்ய கூடாது? பாதுகாப்பு டிப்ஸ் !

இந்த புரேவி புயல் இன்னும் கரையைக் கடக்காத சூழலில், தற்போது மீண்டும் தெற்கு அந்தமான் கடலில் நாளை காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது புயலாக வலுப்பெறுமா? இதன் வீரியம் என்ன? என்பது குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை.

புரவி புயல் செல்லும் சுற்றுலா !

இந்த புரெவி புயலால் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், 

இன்று மாலை முதல் நாளை காலை வரை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் 

இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாய் புண்களை சரி செய்யும் வீட்டு வைத்திய முறைகள் !

புரவி புயல் யாழ்ப்பாணத்திலிருந்து நகர்ந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, காரைக்குடி, மதுரை என தமிழகப் பகுதிகளில் சுற்றுலா போல் செல்கிறது. 

இலங்கை அருகே மன்னார் பகுதியில் மையம் கொண்டுள்ள புரவி புயல் இன்று கன்னியாகுமரி கடல் எல்லையில் மெல்ல நகர்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து மெல்ல நகரும் புரவி புயல் எங்கெல்லாம் செல்கிறது என்பதை பார்ப்போம்.

புரவி புயல் செல்லும் சுற்றுலா !

இது குறித்து தனியார் வானிலை செயலியான விண்டியில் வீடியோ வெளியாகி யுள்ளது. 

அதில் திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டை அருகே மல்லிப்பட்டினம், அட்டானிக்கு மதியம் 12 மணிக்கு நிலை கொண்டிருக்கிறது. பின்னர் 4 மணிக்கு நிலப்பரப்பை தொடுகிறது.

அப்படியே இரவு 7 மணிக்கு ஆவுடையார் கோவிலை அடைந்து அங்கு சுற்றி விட்டு பின் இரவு 9 மணிக்கு காரைக்குடி அருகே தேவக்கோட்டைக்கும் கரூருக்கும் இடையே சென்று அதை தொட்டு விட்டு, 

உங்கள் குழந்தையைத் திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் !

அப்படியே நள்ளிரவு 12 மணிக்கு காளையார் கோவில், அதிகாலை 3 மணிக்கு மேலூர், அங்கிருந்து அதிகாலை 4 மணிக்கு மதுரை செல்கிறது.

இதனால் வாடிப்பட்டி, போடி நாயகன்னூர், திண்டுக்கல், வேடசந்தூர், கொடைக்கானல், கம்பம், அருப்புக் கோட்டை பகுதியில் நாளை அதிகாலை 3 மணிக்கு நல்ல மழை பெய்யும். 

பின்னர் மேற்கு தொடர்ச்சி மலை தொடருக்கு செல்கிறது. அங்கு மூணாறு, வால்பாறை, வைக்கம் ஆகிய பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு  அரபிக் கடலுக்கு செல்கிறது.

அங்கிருந்து பின்னர் லட்சத்தீவை தாண்டி செல்கிறது. இந்த புரவி புயல் சுற்றும் இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

புரவி புயல் செல்லும் சுற்றுலா !

இந்த புயலால் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது. அது போல் கேரள பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது. 

வலுவிழந்த நிலையிலும் இத்தனை ஊர்களுக்கு இந்த புரேவி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது ! கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக திருப்பூண்டி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழை பெய்யுள்ளது. 

எக்லெஸ் கேரட் கேக் செய்வது

தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு அரிச்சல் முனையில் புதிதாக அமைக்கப்பட்ட வளைவு சேதமடைந்து ஒரு பகுதி கடலுக்குள் சென்று விட்டது.

புரெவி புயல் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப் பட்டுள்ளது. 

இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சேது விரைவு ரயில் மண்டபத்தில் இருந்து இயக்கப் படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings