பாமகவினரிடம் சிக்கிய எம்.பி.செந்தில்குமார் - ஆபாச அர்ச்சனை !

0

தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி அருகே திமுக MP செந்தில் குமாரை கிராமத்திற்குள் நுழைய விடாமல் ஆக்ரோசமாக தடுத்த பாமகவினர், அவரை ஆபாச வார்த்தைகளில் பேசி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாமகவினரிடம் சிக்கிய எம்.பி.செந்தில்குமார்
நத்தமேடு கிராமத்தில், வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த சுப்பிரமணி என்பவரின் நினைவுத்தூணுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, வறுமையில் உள்ள அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளதாக செந்தில் குமார் கூறியிருந்தார். 

ஆனால் இந்த நினைவிடம் வன்னியர் சங்க இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் திமுக எம்பி இங்கே வரக்கூடாது என பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஆனால் இதனை மீறி திமுக தொண்டர்களுடன் அங்கு வந்த எம்பி நத்தமேடு கிராமத்திற்குள் நுழைய முயன்றார். அப்போது அங்கு வந்த பாமகவினர் எம்பி செந்தில் குமார் கிராமத்திற்குள் நுழையக்கூடாது என தடுத்து நிறுத்தினர். 

அவர்களை மீறி செந்தில்குமார் உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாமகவினரை தள்ளிவிட்டு செந்தில்குமாரை கிராமத்திற்குள் அழைத்துச் செல்ல திமுகவினர் சிலர் முயன்றனர். 

இதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே கைகலப்பு உருவாகும் சூழல் எழுந்ததால், பாதுகாப்புக்கு வந்த போலீசார், பாமகவினரிடம் இருந்து திமுக எம்பி- ஐ பத்திரமாக மீட்டு, அருகே இருந்த அரசு சேவை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். 
‘முலை வரிச்சட்டம்’ பற்றி தெரியுமா?

ஆனால் அங்கு வந்த பாமக தொண்டர் ஒருவர் அரசு சேவை மைய கதவை மூடி செந்தில்குமாரை உள்ளே செல்லவிடாமல் தடுக்க முயன்றார்.

ஒருவழியாக போலீசார் மற்றும் திமுகவினர் அரசு சேவை மைய கதறை திறந்து உள்ளே எம்பி செந்தில்குமாரை அமர வைத்தனர். ஆனால் அங்கும் பாய்ந்து சென்ற பாமக தொண்டர்கள், ஆபாச வார்த்தைகளால் திட்டி, திமுக MP - ஐ தாக்க முயன்றனர். 

இந்த சம்பவத்தால், பாப்பிரெட்டிப்பட்ட பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றம் நீடித்ததால், போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டு அசம்பாவிதம் நிகழாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)