ஒரே இரவில் ஹீரோவான முதல்வர் எடப்பாடியார் !

0

புயல் என்ற நிவர் வந்ததும் வந்துச்சி  அதை முதல்வர் கையாண்ட முறைகள் அலாதியாக இருந்துச்சி. அந்த வகையில், எதிர்க்கட்சிகளின் திட்டத்தை  தவிடு பொடியாக்கி முன்நேரியுள்ளார் எடப்பாடியார். 

ஒரே இரவில் ஹீரோவான எடப்பாடியார்

இன்னும் சில மாதங்கள்ள தேர்தல் வர உள்ள நிலையில், ஆளும் கட்சி மிக கவனமாக செயல்பட்டு வருகிறது.. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் ஜாக்கிரதையாக  கையாண்டு வருது.
கொரோனா விஷயத்தை கையிலெடுத்த  எதிர்க்கட்சிகள் "கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாவிட்டால், ஆட்சி அமைக்க செய்யும் திமுக" என்ற ஸ்டாலினின் காட்டமான அறிக்கை ஆளும் அதிமுக தரப்பை நிலைகுலைய வைத்தது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

இதற்கு பிறகு சுதாரித்த எடப்பாடியார், ஓபிஎஸ்ஸை கூட அருகில் சேர்க்காமல், விஜயபாஸ்கர் உட்பட பலரை ஓரங்கட்டினார். 

தனி ஒருவராகவே எல்லாவற்றையும் நேரடியாக கவனித்து, இறுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் அளவுக்கு கவனத்துடன் செயல்பட்டு ஆபத்தில் இருந்து சென்னையை மீட்டெடுத்தார். 

டயாபெடிக் ப்ரெண்ட்லி குழம்பு செய்வது எப்படி?

அது முதல் எதிர்க்கட்சிகள் வாய் திறக்கவே இல்லை. அது மட்டும் இல்லாமல் இந்த நிவர் புயலை வைத்து, அடுத்தடுத்த அரசியல் தந்திரத்தை கையில் எடுத்தன.. 

எங்கே 2015 ல் ஏற்பட்ட பாதிப்பு மாதிரியே இந்த முறையும் வந்து விடுமோ என்று பயந்து முதல்வர் புயல் வருவதற்கு 2 நாளைக்கு முன்பே களத்தில் குதித்து விட்டார்.. 

ஹீரோவான முதல்வர்

இந்த  நிவர் புயலை வைத்தே, ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தி விடலாம் என்ற எதிர்கட்சிகளின் நம்பிக்கையை தவிடு பொடியாக்கினார்.. 

முதலாவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பேசிய பேச்சுக்கள் தான் கவனத்தை ஈர்த்தது. 

கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?

பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை, "வாங்க.. உட்காருங்க.. நாம சேர்ந்து ஒன்றாக செயல்படுவோம்" என்று ஆரம்பித்து, மக்களுக்கு பாதிப்பு எந்த வகையிலும் வந்து விடக்கூடாது என்பது முதல், அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட போகிறோம் என்பதை முறைப்படி அறிவித்து, ஒரேடியாக திறந்து விட்டதால் வந்த பாதிப்பை, சென்னை மக்கள் சந்தித்து விடக்கூடாது என்பதற்காகவே, 

அனாதனா குல்சா (கோவா) செய்வது எப்படி?

முதல் கட்டமாக அதுவும் புயலுக்கு முன்னதாகவே திறந்து விட்டு சாமர்த்தியத்தை காட்டினார் முதல்வர்.. பொதுப்பணித்துறை அதிகாரிகளும், அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு, அடையாறு ஆற்றங்கரை பகுதி மக்களை பாதுகாத்து விட்டனர். 

ஒரே இரவில் ஹீரோவான முதல்வர் எடப்பாடியார் !

எல்லாவற்றிற்கும் மேலாக, கொட்டும் மழையில் சினிமாவில் காட்டுவது போல குடையை எடுத்து கொண்டு ஏரிக்கே முதல்வர் வந்து பார்வையிட்டு, ஆய்வு நடத்தியது எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தது.. 

இதற்கு நடுவே ட்விட்டரில் மணிக்கொருதரம் ட்விட் செய்தது மக்களின் கவனத்தை ஈர்த்தன.. அதைவிட யாராவது சந்தேகம், ஆலோசனைகள் சொன்னால், அதற்கு நேரம் ஒதுக்கி பதிலளிக்கும் முதல்வரின் அக்கறை மலைக்க வைத்தன.

பூப்பெய்திய பெண் குழந்தைகள்சாப்பிட வேண்டிய உணவு ! 

இப்படித்தான் அன்று வர்தா புயலில் ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது சிறப்பாக செயலாற்றினார்.. இருந்தாலும் அன்றைய ஓபிஎஸ்ஸை விட, 2015-ல் முதல்வர் ஜெயலலிதாவைவிட, எடப்பாடியார் ஒருபடி மேலே நின்று நிவர் புயல் ஹீரோவாகி விட்டார்!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings