பெண்ணுக்கு 2 வது முறையாக கொரோனா தொற்று !

0

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் மீண்டும் அந்த நோய் எளிதில் தாக்காது என மருத்துவ ஆய்வு கூறுகின்றது. 

பெண்ணுக்கு 2 வது முறையாக கொரோனா தொற்று !
ஆனால் சிலருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவருக்கு 2 -வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவிலிருந்து பாதுகாக்க ...

கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார் என போர்ட்டிஸ் மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுவது பெங்களூருவில் முதல் முறையாகும்.  இது போன்று உலகின் முதல் கொரோனா மறு தொற்று ஆகஸ்ட் 24 அன்று ஹாங்காங்கில் கண்டறியப்பட்டது. 

டிரஸ்ஸை கழட்டு கொரோனா இருக்கான்னு ...

அதன் பின் தெலுங்கானாவில் 2 பேருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதை சுகாதாரத்துறை மந்திரி உறுதி செய்தார். 

2 நாட்களுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு மறு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

ஹாங்காங் நோயாளி குறித்த அறிக்கை வெளியான பின்னர் கருத்து தெரிவித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இது பற்றி பெரிதும் எச்சரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியது. 

கொரோனா மனிதர்களை கொல்வது எப்படி ...

அதே சமயம், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை என்றும், அதனை நாம் கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தது.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings