உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

மக்களிடம் காணப்படும் சில தவறான உணவுப் பழக்கமும் உணவுக்குழாய் புற்று ஏற்பட வழி அமைக்கிறது. எடுத்துக்காட்டு:
உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்
1. காபி மற்றும் தேநீரை அதிக சூடாகக் குடிக்கும் பழக்கம்.

2. கொழுப்பு நிறைந்த இறைச்சி உணவுகளை அடிக்கடி சாப்பிடுதல். 3. காய்கறி, கீரை, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடாதது.
எந்த வயதில் வரும்?

சாதாரணமாக இந்தப் புற்றுநோய் 40 வயதுக்கு மேல் வருகிறது. நாற்பது வயதைக் கடந்தவர் களுக்கு உணவை விழுங்கும் போது சிரமம் ஏற்படுமானால் உணவுக்குழாய் புற்று உள்ளதா எனப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

அறிகுறிகள் என்னென்ன?

இந்த நோய் உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் புளித்த ஏப்பம், பசிக்குறைவு, நெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வு, அஜீரணம், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும். 

இவற்றில் உடல் எடை குறைவது தவிர மற்ற அறிகுறிகள் எல்லாமே சாதாரணமாக இரைப்பைப் புண்ணிலும் காணப்படும். ஆகையால், இந்த நோயாளிகள் இரைப்பைப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். 

இதனால் அறிகுறிகள் தற்காலிகமாக மறையும். என்றாலும், புற்றுநோய் மறையாது. பிறகு உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும்போதுதான் இந்த நோய் உள்ள விவரம் தெரியவரும்.
மற்ற அறிகுறிகள்: எதைச் சாப்பிட்டாலும் தொண்டையில் ஏதையும் அடைப்பது போல் இருக்கும். போகப்போக உணவு, தண்ணீர் எதையும் விழுங்க முடியாது. வாந்தி வரும். 
புற்றுநோய் எங்கெல்லாம் பரவும்?
வாந்தியில் ரத்தம் வரலாம். உணவை விழுங்கும் போது - உணவுக் குழாயில் புற்று உள்ள இடத்தை  உணவு கடக்கும் போது - நெஞ்சில் வலி ஏற்படும். பொதுவாக இந்த நோய் உள்ளவர்களுக்கு நடு நெஞ்சில் வலி நிரந்தரமாக இருக்கும்.

எங்கெல்லாம் பரவும்?

இது நேரடியாகவோ, ரத்தம் வழியாகவோ அல்லது நிணநீர் மூலமோ உடலில் பிற இடங்களுக்குப் பரவக்கூடிய தன்மை உடையது. 
பொதுவாக உணவுக் குழாய்க்கு அருகில் உள்ள நுரையீரலுக்கும் மூச்சுக் குழலுக்கும் நேரடியாகவே பரவிவிடும். ரத்தத்தின் மூலம் கல்லீரல், நுரையீரல், எலும்புகள் ஆகியவற்றுக்குப் பரவும். 

நிணநீர் மூலம் கழுத்து, மூச்சுக்குழல், வயிறு ஆகிய பகுதிகளில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு நோய் பரவும்.
Tags:
Privacy and cookie settings