கூரையில் தொங்கிய மஞ்சரி குடும்பம்.. அதிகாரிக்கே இந்த நிலையா !

மேற்கூரையில் சடலமாக தொங்கிய மஞ்சரியை பார்த்ததும் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அலறி அடித்து துடித்தனர். 
கூரையில் தொங்கிய மஞ்சரி குடும்பம்

இந்த சம்பவம் உபியில் நடந்துள்ளது. மேலும் உயிரிழந்த பெண் அதிகாரி மஞ்சரியின் மரணம், தற்கொலையா, கொலையா என்ற சந்தேகத்தையும் கிளப்பி வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மணியார் நகர் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் மணி மஞ்சரி ராய்.. இவருக்கு 27 வயதாகிறது.. 

இவர் திடீரென தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் மேற்கூரையில் இவரது சடலம் தொங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் குடும்பத்தினர் அலறி விட்டனர்.

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று, மஞ்சரியின் ரூம் கதவை உடைத்து, பிறகு மேற்கூரையில் தொங்கி கொண்டிருந்த சடலத்தை மீட்டனர்.. 

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையும் ஆரம்பமானது.. அப்போது தான் அந்த ரூமில் அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்றினையும் கைப்பற்றினர்.
"பல்லியாவுக்கு வருவதற்காக டெல்லி, மும்பை யிலிருந்து தப்பித்தேன்.. ஆனாலும் நான் ஏமாற்றப்பட்டேன்.. என் தவறான செயல்களே காரணம்.. ரொம்ப காலம் நான் ஏமாற்றப்பட்டேன்" என்று தெரிவித்துள்ளார்... 

இதனால் மஞ்சரி கடுமையான மன அழுத்தம், மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால், மஞ்சரியின் அப்பாவோ, மகளை யாரோ கொலை செய்து விட்டனர், தற்கொலை என்று விவகாரம் மறைக்கப் படுகிறது, 
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் பொண்ணு கோழை இல்லை" என்று குற்றம் சாட்டுகிறார். இதை யடுத்து, இது கொலையா, தற்கொலையா என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
Tags: