கேரளா சென்ற மருத்துவர்களுக்கு நேர்ந்த கொடுமை... அவர்களிடம் கெஞ்சினோம்.. ஷாக் !

கேரளாவில் கொரோனா சோதனை செய்ய சென்ற மருத்துவ குழுவை பூந்தூரா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் மிக மோசமாக நடத்தியதும், அவர்களுக்கு கொரோனாவை பரப்ப போவதாக மிரட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா சென்ற மருத்துவர்களுக்கு நேர்ந்த கொடுமை

இந்தியாவில் ஆங்காங்கே கொரோனா பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் மோசமாக நடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் நடந்து வருகிறது. 

அதிலும் வட இந்தியாவில் அடிக்கடி இந்த சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் இதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவில் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒன்றான பூந்தூரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

அங்கு மக்களிடம் கொரோனா மாதிரி வாங்க சென்ற மருத்துவர்கள், அங்கிருக்கும் மக்களால் மிக மோசமாக நடத்தப்பட்டு உள்ளது.

எங்கே நடந்தது

திருவனந்தபுரம் வல்லியதுரா பகுதிக்கு அருகே இருக்கும் கிராமம்தான் பூந்தூரா. 
மருத்துவர்களுக்கு நேர்ந்த கொடுமை

இங்கு இருக்கும் மக்களிடம் கொரோனா மாதிரிகளை பெற மருத்துவர் தியூத்தி ஹரிபிரசாத் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்டு குழு அந்த கிராமத்திற்கு சென்றுள்ளது. 

மருத்துவர்கள் வருவதை அறிந்து கொண்ட மக்கள், அவர்களின் காரை கிராமத்தின் வாயிலில் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.

என்ன பேட்டி

காரை உள்ளே விடாமல் கட்டுமரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தி, மொத்தமாக காரை வழி மறித்து உள்ளனர். அப்போது அந்த மருத்துவர்களிடம் அந்த பொது மக்கள் தகராறு செய்துள்ளனர். 
இது தொடர்பாக மருத்துவர் தியூத்தி ஹரிபிரசாத் கூறுகையில், நாங்கள் சென்ற காரை 60 பேர் வரை சுற்றி நின்று மறித்தனர். வேகமாக கண்ணாடியில் அடித்தனர்.

மிக மோசம்

நீங்கள் எடுக்கும் கொரோனா டெஸ்ட் தவறானது. நீங்கள் மோசடி செய்கிறீர்கள் என்று கூறி எங்கள் காரை மோசமாக தாக்கினார்கள். 
கேரளா சென்ற மருத்துவர்கள்

அதோடு எங்களை வேண்டும் என்றே தொட்டு கொரோனாவை பரப்ப நினைத்தார்கள். எங்கள் குழுவில் இருந்தவர்கள் அங்கேயே அழுக தொடங்கி விட்டன. 

எங்களை அவர்கள் மிரட்டினார்கள். நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம். எங்களை விட்டு விடும்படி கதறினோம்.

கண்டனமும்

அரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்பே அவர்கள் எங்களை விட்டனர் என்று மருத்துவர் தியூத்தி ஹரிபிரசாத் கூறியுள்ளார். தற்போது கேரளா மாநிலம் முழுக்க இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. 
இந்த சம்பவத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர் சைலஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது .
Tags: