விமானம் அதிக உயரத்தில் பறந்து சென்றால் என்ன நடக்கும்?





விமானம் அதிக உயரத்தில் பறந்து சென்றால் என்ன நடக்கும்?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
விமானங்களின் சிறகுகள் வளித்தகடு (aerofoil) என்ற ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு கொண்டவை. இதனால் அவை காற்றின் ஊடே விரைந்து செல்கையில் அவற்றின் சிறகிற்கு மேற்புறமும் அடிப்புறமும் உள்ள காற்றழுத்தம் மாறுபடும்.
விமானச் சிறகுகளில் மேல் நோக்கிச் விசை

அடிப்புறக் காற்றழுத்தத்தை விட மேற்புறக் காற்றழுத்தம் குறையும். இதனால் விமானச் சிறகுகளில் மேல் நோக்கிச் விசை ஒன்று ஏற்படுகிறது. இவ்விசையை 'தூக்கு' (lift) என்பர்.
இத்தூக்கு விசை விமானத்தின் (கீழ் நோக்கிய) எடையை விட மிகுந்து இருக்கையில் விமானம் மேலே எழும்பும். எனவே, விமானம் பறக்க காற்றழுத்தம் தேவை. 

இந்தக் காற்றழுத்தம் புவியின் வளிமண்டலத்தால் (atmosphere) ஏற்படுவது. புவியின் வளிமண்டலம் (தரையிலிருந்து) உயரத்தைப் பொறுத்து தனது அடர்த்தியில் மாறுபடுகிறது. 

அதாவது, உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தின் அடர்த்தி குறைந்து கொண்டே செல்லும். இதனால், ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் விமானத்தின் எடையை ஈடு செய்யக்கூடிய காற்றழுத்த வேறுபாடு இருக்காது.

அத்தகைய உயரத்திற்குச் சென்றால் விமானம் தனது பறக்கும் தன்மையை இழந்து 'சரிந்து' விழும் (இதனை 'stalling' என்பர்!) (மீண்டும் அடர்த்தி நிறைந்த வளிமண்டலப் பகுதிக்கு வந்த பின் விமானத்தால் பறக்க இயலும் என்றாலும் சரிந்து விழும் விமானம் 
தனது சமநிலையை இழந்து கட்டுப்பாடற்றுச் சுழன்று கொண்டிருக்கும் என்பதால் அதனை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வருதல் மிக அரிது! 
விமானம் அதிக உயரத்தில் பறந்து சென்றால்

விமானம் எவ்வளவு உயரம்வரை பாதுகாப்பாகப் பறக்கலாம் என்பது அதன் மொத்த எடையைப் பொறுத்தது. 

விமானம் மேலே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைந்து கொண்டே போவதால் விமானத்தில் உள்ள இயந்திரங்களின் சக்தியும் குறைந்து கொண்டே போகும்.
குண்டா இருந்தால் ஒல்லியாக காட்ட இதோ சில டிப்ஸ் !
அதனால் விமானம் மேற்கொண்டு உயரே செல்லும் திறனும் குறைந்து கொண்டே போகும். (Rate of climb). ஓவ்வொரு வகை விமானத்திற்கும் இதையே இரண்டு உயரங்களில் குறிப்பிடுவார்கள்.

பணி எல்லை உயரம் (Service ceiling Altitude).

எந்த உயரத்தில் விமானத்தின் உயரே செல்லும் திறன் 100 அடி/நிமிடம் வரை உள்ளதோ அந்த உயரம்.

உ ம்: ஏர் பஸ் A320 - 39800 அடி.

முழுமையான எல்லை உயரம் (Absolute ceiling Altitude).

எந்த உயரத்தில் விமானத்தின் உயரே செல்லும் திறன் 0 அடி/நிமிடம் உள்ளதோ அந்த உயரம்.
விமானம் மேலே செல்லச் செல்ல ஒரு நேரத்தில் இயந்திரங்களின் முழு சக்தியையும் உபயோகித்தாலும் அந்த விமானத்தால் ஒரு அடி கூட உயர முடியாது.
Tags: