கொரோனாவின் மூன்று புதிய அபாய அறிகுறிகள் !

கொரோனா வைரஸ் பற்றி நாம் கேள்விப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இன்று வரை கொடிய கொரோனாவின் கோர தாண்டவத்தால் 10,577, 756 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். சுமார் 513, 186 பேர் இறந்துள்ளனர். 
கொரோனாவின் மூன்று புதிய அபாய அறிகுறிகள்

நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்தவாறு உள்ளன.

இந்த மோசமான கொரோனாவை அழிக்கும் முயற்சியில் பல நாடுகள் மிகவும் தீவிரமாக களம் இறங்கி யுள்ளன. அதில் சில நாடுகள் சோதனை முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றன. 
இருப்பினும், சீனாவின் வுஹானில் உள்ள சந்தையில் தோன்றியதாக கூறப்படும் SARS-COV2 வைரஸ் பற்றி இன்னும் நிறைய அறிய வேண்டி யிருக்கிறது.

இந்த வைரஸ் மனித உடலை எவ்வாறு தாக்குகிறது என்பதை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்க முயற்சித்து வரும் வேளையில், ஒவ்வொரு நாளும் புதிய அறிகுறிகளும் கண்டு பிடிக்கப்பட்டும் வருகின்றன.

அதில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), கொரோனா அல்லது கோவிட்-19 அறிகுறிகளின் பட்டியலில் புதிதாக மூன்று அறிகுறிகளை சேர்த்துள்ளது. 

இந்த அறிகுறிகளானது வழக்கமான அறிகுறிகளுக்கு முன்பே தோன்றும் என்றும் கூறியுள்ளது.

மார்பு நெரிசல் மற்றும் மூக்கு ஒழுகல்
மார்பு நெரிசல் மற்றும் மூக்கு ஒழுகல்

கொரோனாவின் மிகவும் விசித்திரமான அறிகுறிகளில் ஒன்று வறட்டு இருமல் அல்லது சளி என்று கருதப்பட்டது. 

சமீபத்திய கண்டு பிடிப்புக்களின் படி, இந்த வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் நோயாளிகள் மார்பு நெரிசல் மற்றும் மூக்கு ஒழுகலை அறிகுறியாக கொண்டதைத் தெரிவிக்கின்றனர். 
பல சமயங்களில், இந்த வைரஸ் சுவாச பாதையில் தொடங்கும் என்று அறியப்படுவதால், இது மேல் சுவாச பாதையில் தொற்றுக்களை உண்டாக்கி இந்த அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

குமட்டல்/மலச்சிக்கல்
குமட்டல்/மலச்சிக்கல்

குமட்டல் உணர்வு அல்லது மலச்சிக்கல் போன்றவையும் கொரோனா வைரஸின் அறிகுறிகளில் ஒன்றாகும். 

அதிலும் ஒருவருக்கு லேசான தொற்று ஏற்பட்டிருந்தால், அவர்கள் குமட்டல் அல்லது மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஆனால் இரைப்பைக் குடல் பிரச்சனையை அனுபவிக்கும் பலர் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற தவற விடுகிறார்கள். 

வயிற்று வலி, பசியின்மை, சுவை உணர்வு இல்லாமை போன்றவை கொரோனா அறிகுறிகளுள் அடங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வயிற்றுப் போக்கு
வயிற்றுப் போக்கு
ஒருவர் கட்டாயம் தவிர்க்கக்கூடாத மற்றொரு இரைப்பைக் குடல் பிரச்சனை தான் வயிற்றுப் போக்கு. மற்ற வைரஸ்களைப் போன்றே கோவிட்-19 வைரஸ் கூட செரிமான மண்டலத்தைத் தாக்கி பிரச்சனையை உண்டாக்கும் என்பது தற்போது கண்டறியப் பட்டுள்ளது. 

எனவே உங்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால், அதாவது உங்கள் மலம் நீர் போன்றோ அல்லது 
அடிக்கடி மலம் கழிப்பது போன்றோ, லேசான தலைவலி, அடிவயிற்றுப் பிடிப்புக்கள் அல்லது வயிற்று உப்புசம் போன்றவை 3-4 நாட்களுக்கு இருந்தால் அல்லது 

இதர கொரோனா அறிகுறிகளையும் உணர்ந்தால், உடனே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

மற்ற அறிகுறிகள் என்னென்ன?
மற்ற அறிகுறிகள் என்னென்ன?

இவைத் தவிர, கொரோனா வைரஸ் பல வழிகளில் நோயாளிகளைத் தாக்கும் என்று கண்டறியப் பட்டுள்ளது. 

அதில் வறட்டு இருமல், நீண்ட நாள் காய்ச்சல், தலைவலி முதல் பலரும் அறியப்படாத சில கொரோனா அறிகுறிகளான சுவையிழப்பு அல்லது 

வாசனை இழப்பு, மனக் குழப்பம், சுவாசிப்பதில் சிரமம், தலைச்சுற்றல், கண் பிரச்சனைகள், நீல நிற உதடுகள், கடுமையான குளிர், தசை வலி, சோர்வு அல்லது மோசமான சந்தர்ப்பங்களில் மந்தநிலை போன்றவை அடங்கும்.

கோவிட்-19 மக்களை வித்தியாசமாக பாதிக்கிறது
கோவிட்-19 மக்களை வித்தியாசமாக பாதிக்கிறது

கொரோனா குறித்த வளர்ந்து வரும் ஆய்வில், இதன் அறிகுறிகள் குழந்தைகளில் வித்தியாசமாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. 

பலர் கவாசாகி நோயைப் போன்ற அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 
கவாசாகி நோய் என்பது வீக்கத்தை உண்டாக்கும் மற்றும் விசித்திரமான கோவிட் கால்விரல்கள் (COVID Toes) ஆகும். கர்ப்பிணி பெண்களில், இந்த அறிகுறிகளானது மருத்துவ மனையில் அனுமதிக்கக்கூட வழிவகுக்கும்.

ஆராய்ச்சியாளர்கள் இன்னும் அறிய முயற்சிக்கின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் இன்னும் அறிய முயற்சிக்கின்றனர்

கொரோனா குறித்த பல தகவல்களை ஆராய்ச்சி யாளர்கள் சேகரிக்கும் போது, கொரோனாவின் அறிகுறி பட்டியல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 

இதனால் ஆய்வாளர்கள் கொரோனா வழக்குகளின் நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்துள்ளனர். 

முன்னதாக கொரோனா வைரஸ் ஒரு சுவாச வைரஸ் என்று கருதப்பட்டாலும், தற்போது இந்த வைரஸ் உடலை பல வழிகளில் முடக்குவதை அறிந்துள்ளனர். 
எனவே இந்த வைரஸை முடக்கும் பல வழிகளை ஆராய்ச்சி யாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த வைரஸ் நாம் நினைப்பதை விட மிகவும் ஆபத்தானது.
Tags:
Privacy and cookie settings