புற்று நோய் வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன?

புற்று நோய் வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன?

உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன.

நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும்.

ஆயினும் பொதுவாக அறிகுறிகள் உள்ளன. அவை:

மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்

புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.

குணப்படாத புண்கள்.

கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.

மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.

தொடர்ந்து அஜீரணத் தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.

விவரிக்க முடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.

இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு

பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி

தொடர்ந்து அஜீரணத் தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.

சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம்.

இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு

பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி

காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு)

*மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல்.

*உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம்.

*திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.

எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்று நோய்க்கு என்னென்ன காரணங்கள்?

வாய் புற்று:

புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை. நுரையீரல் புற்று:

புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற் சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர் களுக்கு. வயிற்றுப் புற்று:

மது அருந்துதல், புகைப் பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை (fast food)அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

ஈரல் புற்று:

மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.

மார்புப் புற்று:

மார்பகப் புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்று நோயாகும்.

பெண்களில், மரணத்தை கண் முன் நிறுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.

அறிகுறிகள்

மார்பு வீங்குதல்

மார்புக் காம்பிலிருந்து வடிதல்

மார்பகக் காம்பு உள் நோக்கி இழுத்தல்

சிவந்த / வீக்கமடைந்த மார்புக் காம்பு

மார்பகம் பெரியதாகுதல்

மார்பு சுருங்குதல்

மார்பகம் கல்போல் கடினமாதல்

எலும்பு வலி

முதுகு வலி

காரணங்கள்?

குடும்பத்தில் உள்ளவர் களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும் பாலான நெருங்கிய உறவினர் களுக்கு)

பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.

ஏற்கெனவே பாதிப்படைந்த மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கெனவே உள்ள மார்பக நோய்கள்.

மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)

12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்

குழந்தை இல்லாமை.

மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப் பழக்கம், உடற்  பருமன் மற்றும் ஏற்கெனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.

ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை,

கருப்பை புற்று:

அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு

இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. வெளி நாடுகளில் இப்போது பயன்படுத்தப் பட்டுக் கொண்டி ருக்கிறது)


சரும புற்று:

*சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், *சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள்,

*நாள்பட்ட ஆறாத புண். (இந்தெந்த புற்று நோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப் பட்டாலும், பிரச்சினைக் குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்கு கூட இந்த நோய் ஏற்படலாம்.

`மது அருந்த மாட்டார். புகைப் பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்து விட்டதே' என்று வருந்திப் பயனில்லை.

முற்றிலும் மாறுபட்ட இதர காரணங் களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிரு க்கலாம்)

இரத்தப்புற்று நோய்

லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய்.

இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.

அறிகுறிகள்

அதிகளவில் இரத்தம் வடிதல்

இரத்தசோகை

காய்ச்சல், குளிர், இரவு நேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடை யாளங்கள்

பலவீனம் மற்றும் சோர்வு

பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்

பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்

நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)

ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்

காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்

மூட்டு வலி

உள்நார்தசைகள் வீக்கமடைதல்

இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?

தடுக்க முயற்சி க்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம் தானே! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்

புகையிலை, மது, புகைப் பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவை களை தவிர்த் திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.

`ஹியூமன் பபிலோமா வைரஸ்' (Human Papilloma Virus - H.P.V) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது.

இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நோய் தாக்கியி ருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண்டறிய முடியும்?

முதலில் நாம் குறிப்பிட் டிருக்கும் 10 அறி குறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்று விட வேண்டும்.

ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள்,

என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார்.

அதை வைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.

சரி கண்டு பிடித்து விட்டால், குணப்படுத்தி விட முடியுமா?

ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து விட்டால் 95 சதவீதம் குணப்படுத்தி விடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும்.

முற்றிய நிலை என்றால் குணப் படுத்துவது கடினம்.

இதில் மகிழ்ச்சிக் குரிய விஷயம் என்ன வென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பி ருக்கிறது.

இதற்கு `பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்' என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று,

ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.

புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்து கொள்வது அவ்வளவு நல்ல தில்லை என்பது சரியா?

காலம் மாறிக் கொண்டி ருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்து கொண்டி ருக்கின்றன. மருத்துவ நிபுணர்களும் உருவாகிக் கொண்டிருக் கிறார்கள்.

30, 40 வருடங் களுக்கு முன்னால் புற்று நோய்க்கு `மேஜர்' ஆபரேஷன்கள் செய்யப் பட்டுக் கொண்டி ருந்தன.

இப்போது `சிம்பிளான' ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப் படுகிறது.

ஆனாலும் மற்ற நோய்களு க்கான ஆபரேஷன் களோடு ஒப்பிடும்போது புற்று நோய்க்கான ஆபரேஷன் சற்று `ரிஸ்க்'தான். இருந்தாலும் பயப்பட வேண்டிய தில்லை.

புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?

மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. அவை:

1. ஆபரேஷன்,

2. கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்),

3. ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).

புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?

புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல.

புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்பு தன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும்.
 http://en.wikipedia.org/wiki/Cancer
பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.
Tags: