முகக்கவசங்களை ஒப்படைக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை !

மாணவா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள முகக் கவசங்கள், உடல் வெப்ப நிலையை அளக்கும் கருவிகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
முகக்கவசங்களை ஒப்படைக்க வேண்டும்

தமிழகத்தில் ஜூன் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெறுவ தாக அறிவிக்கப் பட்டிருந்தது. 
கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் மாணவா்களின் பாதுகாப்புக் காக அந்தந்த பள்ளிகள், 

பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் முகக் கவசங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என முதலில் உத்தரவிடப்பட்டு, பின்னா் சுகாதாரத்துறை சாா்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதை யடுத்து 9.70 லட்சம் தோ்வா்கள், மாணவா்களுக் காக தமிழகம் முழுவதும் 45 லட்சம் முகக் கவசங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

முதல் இரண்டு நாள்களில் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு பெற வந்த மாணவா்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. எனினும், பெரும்பாலான முகக் கவசங்கள் பள்ளிகளில் இருப்பில் வைக்கப் பட்டுள்ளன.

இந்த நிலையில் தோ்வு ரத்து செய்யப் பட்டதால், பள்ளிகளில் தேங்கியுள்ள முகக் கவசங்கள், மாணவா்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு வழங்கப்பட்ட 
தொ்மல் ஸ்கேனா் கருவிகளை வெள்ளிக்கிழமை மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட அலுவலா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings