ஹாம் ரேடியோக்கள் மட்டும் எப்படி பேரிடர் காலங்களில் இயங்குகின்றன?

காரணம் இதற்கு குறைவான மின்சாரம் மட்டுமே தேவை. மற்றபடி எந்த வசதிகளும் தேவை யில்லை.  ஒருமுறை ஹாம் ரேடியோக் களை வாங்கி விட்டால் அதற்கு பிறகு அதில் எந்த செலவுமே இல்லை.
ஹாம் ரேடியோக்கள் எப்படி இயங்குகின்றன?

மிக அதிக தூரங்களு க்கு நம்மால் யாருடன் வேண்டு மானாலும் கட்டணம் எதுவுமின்றி தொடர்பு கொள்ள முடியும்.

இந்தியா வில் ஏற்பட்ட சுனாமி, குஜராத் பூகம்பம், உத்தரகாண்ட் வெள்ளம், சென்னை வெள்ளம், கும்பகோணம் மகாமகம் போன்ற ஜன நெரிசல் மிக்க இடங்கள் எனப் பல்வேறு சமயங்களில் இந்த ஹாம் ரேடியோக்களை வைத்தி ருக்கும் நபர்களின் உதவி பயன் பட்டுள்ளது. 
35 வயதுக்கு மேல் இந்தப் புற்றுநோய் வரலாம் !
ஹாம் ரேடியோக்கள் என்பவை வெறும் பொழுது போக்கு மட்டுமே கிடையாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இதன் மூலம் நாட்டுக்குச் சேவையும் செய்யலாம்.

ஒரு பேரிடர் வந்து தகவல் தொடர்பு பாதிக்கப் பட்டால் உடனே நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெச்சூர் ரேடியோ அமைப்பு களத்தில் இறங்கும். 

அந்தப் பகுதிகளில் இறங்கும் ஹாம் ரேடியோக்கள் வைத்திருக்கும் ஹாம்ஸ்களை ஒருங்கி ணைக்கும்.
பேரிடர்களில் கைகொடுக்கும் ஹாம் ரேடியோ !
பின்னர் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்த பின்னர் ஒவ்வொருவ ருக்கும் ஓர் இடம் ஒதுக்கப் பட்டு அங்கிருந்து தகவல் களை பரிமாறு வார்கள்.

வாக்கிடாக்கி போல

இப்படித் தான் இக்கட்டான சமயங்களில் நாங்கள் இயங்குவோம். தகவல் தொடர்பு துறையில் ஆர்வம் இருப்பவர் களுக்கு இந்த ஹாம் ரேடியோக்கள் வரப்பிரசாதம் எனலாம். 
அந்த அளவுக்கு அறிவியல் ஆர்வம் ஊட்டக் கூடிய விஷயம் இது. ஃபேஸ்புக் போலவே இதன் மூலமும் அதிக நண்பர்களை நம்மால் சம்பாதிக்க முடியும்.

இந்தியாவில் எத்தனை பேர் ஹாம் ரேடியோக்கள் பயன்படுத்துகின்றனர்?

இந்தியாவில் சுமார் 5,000 முதல் 10,000 பேர் வரை மட்டுமே ஹாம் லைசென்ஸ் வைத்திருப் பார்கள். சுமார் 120 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் இந்த எண்ணிக்கை நிச்சயம் மிகக் குறைவு.

இன்னும் அதிகம் பேர் இதனைப் பயன்படுத்தும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்.  இந்தியா வின் பல பிரபலங்கள் ஹாம் ரேடியோக்களை உபயோகிக் கின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஹாம் ரேடியோ பயன்படுத்தி வந்தார். 
அவரது கால் சைன் VU2RG. தற்போது சோனியா காந்தி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், அமிதாப் பச்சன், சாருஹாசன், கமல்ஹாசன், மம்முட்டி போன்றோர் ஹாம் லைசென்ஸ் வைத்து ள்ளனர்.

வாக்கிடாக்கி போலத் தான் இதுவுமா?

வாக்கிடாக்கி மற்றும் ஹாம் ரேடியோக்கள் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. வாக்கிடாக்கி மூலம் அதிக தூரம் பேச முடியாது. ஆனால், இதன் மூலம் அதிக தூரம் செய்திகளை அனுப்ப முடியும்.

அத்துடன் ஹாம் ரேடியோவில் நாம் பேசும் விஷயங்கள் பலரை சென்றை டையும். நமது செய்திகளை ஒருவருக்கு அனுப்பினாலும், அதை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். ஹாமின் பலம், பலவீனம் இரண்டுமே இது தான்.

இந்த ஹாம் ரேடியோக் களை பயன் படுத்த என்னென்ன கருவிகள் வேண்டும்?

முதலில் இதற்கான தேர்வு எழுதி லைசென்ஸ் வாங்க வேண்டும். நமக்கான கால் சைன் ஒதுக்கப் பட்ட பிறகே ஹாம் ரேடியோவை வாங்க முடியும்.

தற்போது ரூ.2,000-ல் இருந்தே இந்த ரேடியோக்கள் கிடைக் கின்றன. இவற்றைக் கொண்டு நாம் ஹாம் ரேடியோ மூலமாக சுமார் 10 கி.மீ அளவுக்கு, 
மிகக் குறைந்த மின் சக்தியில், பேட்டரி உதவியுடன் செய்திகளை அனுப்ப முடியும். ஆன்டனாக்கள் அமைப்பதன் மூலமாக இந்த தூரத்தை இன்னும் அதிகப் படுத்தலாம்.

தற்போது ஹாம் ரேடியோக் களை கணினி மற்றும் மொபைல் மூலமாக இயக்கும் அளவுக்குத் தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டன.
இணையம் செயல்படாத போது கைகொடுப்பது ரேடியோ

இவை இணையத்தின் உதவியுடன் இயங்குபவை. இணையத் தின் உதவியுடன் போனில் கூட ஹாம் ரேடியோவை பயன் படுத்தலாம்.

ஆனால், பேரிடர் காலங்களில் இணையம் செயல் படாத போது நமக்குக் கைகொடுப்பது ரேடியோக்கள் தான். எனவே நிச்சயம் அவற்றை வாங்க வேண்டும்.
தொலைத் தொடர்பு சாதனங் களின் பயன்களை சாதாரண நாட்களில் நாம் அனுபவித்து விட்டோம். அதன் அருமையை பேரிடர் காலங் களில் உணர்ந்து விட்டோம்.

எனவே இன்னும் காலம் தாழ்த்தாது இது போன்ற பேரிடர் காலங் களிலும் கை கொடுக்கும் தொழில் நுட்பங்களின் மீது நம் கவனத்தை செலுத்த வேண்டும்" என்று சொன்னார் ஜெய்சக்திவேல்.
Tags: