மகளின் துணி களைந்து.. உள்ளாடை கழட்டி... பலாத்காரம் போல சித்தரித்த தந்தை !

மகளின் துணி களைந்து.. உள்ளாடை கழட்டி... பலாத்காரம் போல சித்தரித்த தந்தை !

பெற்ற தந்தையே மகளை கொன்று, அவரது ஆடையை களைந்துள்ளார்.. சிறுமியின் உள்ளாடையையும் கழற்றி எல்லோரும் பார்க்கும்படி வீசியெறிந்துள்ளார்.. 
மகளின் துணி களைந்து.. உள்ளாடை கழட்டி

இதற்கு காரணம் பலாத்காரம் செய்து தான் மகள் கொல்லப் பட்டுள்ளாள் என்பதை நம்ப வைப்பதற்காகவே இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்.. 

கந்தர்வக்கோட்டை நரபலி சம்பவத்தில் அடுத்தடுத்த தகவல்கள் நம்மை நிலைகுலைய வைத்து வருகிறது!!

கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. 55 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.. 
முதல் மனைவி இந்திரா, அவருக்கு வித்யா உட்பட 4 குழந்தைகள் உள்ளனர்.. 2வது மனைவி மூக்காயி.. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த வித்யா, 15 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இறந்து விட்டார்.. உடம்பெல்லாம் காயங்கள் இருக்கவும் அது சம்பந்தமான விசாரணை நடந்து வந்தது.. 

அப்போதுதான் திடீர் திருப்பமாக பெற்ற தந்தையே மகளை நரபலி தந்தது தெரியவந்தது. இதற்கு காரணம் பெண் மந்திரவாதி வசந்திதான்!!

முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளில் யாரையாவது ஒருவரை நரபலி தந்தால் செல்வம் கொட்டும் என்று சொல்லி இருக்கிறார்.. 

அதனால் தான் கடந்த 17-ம் தேதி இரவு, அதாவது மகளை கொல்வதற்கு முந்தைய நாள் தைல மரக்காட்டுக்குள் விடிய விடிய பூஜை நடத்தி விட்டு வந்துள்ளார்.

பொழுது விடிந்ததும் காலை 7 மணி அளவில், வித்யாவை கூப்பிட்டு குளத்தில் போய் தண்ணீர் எடுத்து கொண்டு வர சொல்லி உள்ளார்.. 

மகள் குடத்தை எடுத்துக் கொண்டு குளத்துக்கு போனதும், பின்னாடியே அப்பா பன்னீர்செல்வமும் சென்றிருக்கிறார். உன்னுடன் பேச வேண்டும் என்று சொல்லியே தைல மரக்காட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
பூஜை செய்த இடத்தில் மகளை நிற்க வைத்ததுமே அங்கிருந்த பொருட்களை பார்த்து பயந்து அலறி உள்ளார் சிறுமி.. நான் போய் அம்மா கிட்ட சொல்ல போறேன் என்று சொல்லவும், மகளின் கையை பிடித்து இழுத்தி நிறுத்தினார் பனீர்செல்வம்.. 

குடத்தை தலையில் வைத்து தூக்கி செல்வதற்காக கொண்டு வந்திருந்த டவலை பிடுங்கி மகளின் கழுத்தை இறுக்கி உள்ளார். 

இதை இவரது 2வது மனைவி மூக்காயி, மந்திரவாதி வசந்தி உட்பட சிலர் வேடிக்கை பார்த்து கொண்டே நின்றிருக்கிறார்கள்.

சிறுமி இறந்ததுமே மூக்காயி தவிர அங்கிருந்த அனைவரையுமே அனுப்பி விட்டார் பன்னீர் செல்வம்.. 

பிறகு பலாத்காரம் போல இதை சித்தரிக்க வேண்டும் என்பதற்காக மகளின் துணிகளை பெற்ற தந்தையே களைந்துள்ளார்.. 

மகளின் உள்ளாடையையும் கழற்றி எல்லாரும் பார்க்கும்படி அங்கேயே எறிந்துள்ளார்.. பிறகுதான் மூக்காயியை அழைத்துகொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

ஆனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் பலாத்காரம் செய்யப்பட வில்லை என்று ரிசல்ட் வந்ததை பன்னீர் எதிர்பார்க்கவே இல்லை. மேலும் கழுத்தில் கிடந்த தடயங்களும் நெரித்து கொன்றதை அம்பலப்படுத்தியது. 
இன்னும் விசாரணை நடந்து கொண்டே இருக்கிறது.. பெற்ற மகளின் துணிகளை களைந்து, உள்ளாடையையும் கழற்றி எரிந்த இந்த மனித மிருகத்தின் செயலை நினைத்து மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Tags: