உப்பு நீர் கொரோனாவை அழிக்குமா?

கொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
உப்பு நீர் கொரோனாவை அழிக்குமா?

இந்த பாதிப்பை சமாளிக்க ஒவ்வொரு அரசாங்கமும் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. கைகளை அவ்வப்போது சுத்தமாகக் கழுவ வேண்டும், 

இருமலின் போது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என்பது போன்ற சில வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கிய போதும் மற்றும் சில கட்டுக்கதைகள் சிகிச்சை அல்லது தடுப்பு முறை என்ற பேரில் சுற்றி வருகின்றன.
உலக சுகாதார நிறுவனம் இத்தகைய கட்டுக்கதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை நாம் இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

போலி தகவல்

01.உப்பு நீர் பயன்படுத்துவது கொரோனாவை தடுக்கும்.

உண்மை

உப்பு நீர் கொண்டு மூக்கை கழுவுவதால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

சாதாரண சளி ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து நிவாரணம் பெற இந்த வழிமுறை உதவலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

ஆனால் சுவாச தொற்று பரவாமல் தடுக்க இந்த உத்தி உதவுவது இல்லை என்பது மட்டும் உறுதி.

02. ஆன்டி-பயாட்டிக் மருந்துகள் சிறந்த தீர்வைத் தரும்.

உண்மை

கிருமி தொற்று பாதிப்பைப் போக்க ஆன்டி-பயாட்டிக் மருந்துகள் உதவும். ஆனால் இந்த வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தடுப்பூசிகள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.
தற்போது இதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.

03. ஹாண்ட் ட்ரையர் பயன்படுத்துவதால் வைரஸ் கொல்லப்படுகிறது.

உண்மை

ஹாண்ட் ட்ரையர் பயன்படுத்துவதால் தொற்று பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்று சிலர் நம்புகின்றனர். 
ஹாண்ட் ட்ரையர் பயன்படுத்துவதால்

ஆனால் இது உண்மை இல்லை. தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கைகளைக் கழுவது சிறந்த முறையாகும். ஆல்கஹால் அடிப்படை கொண்ட மருந்துகள் ஓரளவிற்கு நன்மை அளிக்கும்.

04. பூண்டு உட்கொள்வதால் தொற்று பாதிப்பு தடுக்கப்படும்.

உண்மை

பூண்டு நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது என்பதை உலக சுகாதார நிறுவனம் மறுக்க வில்லை. ஆனால் பூண்டு உட்கொள்வதால் தொற்று பாதிப்பு தடுக்கப் படுகிறது என்பது உண்மை அல்ல. 
ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். அதே நேரம் கொரோனா வைரஸ் குறித்த அபாயம் தடுக்கப்படாது.
Tags: