நூற்றுக்கணக்கில் காகங்கள்? இயற்கையின் எச்சரிக்கை உண்மை என்ன?

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் அடுத்த பிரச்னையாக உள்ளன. 
நூற்றுக்கணக்கில் காகங்கள்?

அதிக எண்ணிக்கை யிலான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்வதால் வட மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் சவுதியில் உள்ள சூப்பர் மார்கெட் முன்பு அதிக எண்ணிக்கை யிலான காகங்கள் ஒன்று கூடியதாகவும், இது இயற்கையின் மாறுபாட்டிற் கான அறிகுறி எனவும் பலரும் கருத்து தெரிவித்தனர். 

அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதலங்களில் பரவியது. அந்த வீடியோவில் நூற்றுக் கணக்கான பறவைகள் ஒன்று கூடி பறக்கின்றன.

இந்நிலையில் அது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என தெரிய வந்துள்ளது. 

அந்த வீடியோ டெக்சாஸில் உள்ள வால்மார்ட் எதிரே 2018 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்றும், அதில் பறப்பது காகமே இல்லை எனவும் கிராக்கிள் என்ற பறவை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
அந்த வீடியோவுக்கும் சவுதிக்கும் தொடர்பே இல்லை என்றும் மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சிலர் இந்த வீடியோ குறித்து இணைய தளவாசிகள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். நன்றி.. republicworld

Tags: