கொரோனாவிற்கு இடையிலும் கலக்கும் ஒடிசா - புதிய முதலீடு !

ஒடிசாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அம்மாநில அரசு ரூ 8,850.19க்கு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
கொரோனாவிற்கு இடையிலும் கலக்கும் ஒடிசா

ஒடிசாவில் கொரோனா தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. ஒடிசாவில் மொத்தம் 82 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 30 பேர் குணப்படுத்தப் பட்டுள்ளனர். 
ஒரே ஒருவர் தான் அங்கு பலியாகி உள்ளார். மீதம் இருக்கும் 51 பேர் நல்ல உடல் நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எல்லா மாநிலங்களை போல ஒடிசாவில் கொரோனா காரணமாக பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் அம்மாநில அரசின் பொருளாதார சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

முக்கியமாக கொரோனா லாக் டவுன் காரணமாக நலிவடைந்து இருக்கும் நிறுவனங்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக உயர்மட்ட குழு கூட்டத்தில் முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. 
புதிய முதலீடு ஒடிசா

அந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, அமைச்சர்கள் சுஷாந்த் சிங், மாலிக், தீபியா சங்கர் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையின் முடிவில் ஒடிசாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அம்மாநில அரசு ரூ 8,850.19க்கு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. 
மொத்தம் இரண்டு பெரிய முதலீடுகளுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. மொத்தம் இதன் மூலம் உடனடியாக 5250 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

கொரோனாவால் பாதிப்படைந்து இருக்கும் அம்மாநில மக்களை இந்த செய்தி மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Tags:
Privacy and cookie settings