விளையாட்டில் தோற்றதால் மனைவியின் முதுகெலும்பை உடைத்த கணவன் !

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் வீடுகளில் செய்வதறியாது முடங்கி யுள்ளனர். 
மனைவியை முதுகெலும்பை உடைத்த கணவன்

இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் ஆன்லைனில் லூடோ கேம் விளையாட முடிவு செய்தனர்.

இந்த விளையாட்டில் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியின் முதுகெலும்பில் தாக்கி யுள்ளார். 
இதனால் காயம் அடைந்த அந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

முதுகெலும்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சிகிச்சை அளிக்கும் குஜராத்தின் வதோதரா மருத்துவர்கள் கூறுகின்றனர்.
விளையாட்டில் தோற்றதால்

இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமா அல்லது சமரசம் செய்ய விரும்புகிறீர்களா? என பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன நல ஆலோசகர்கள் கேட்டறிந்தனர். 

தவறை ஒப்புக் கொண்டு கணவன் மன்னிப்பு கோரியதால், சிகிச்சை முடிந்து தனது பெற்றோர்களுடன் சில நாட்கள் தங்கி விட்டு வீடு திரும்புவதாக அந்த பெண் கூறி யுள்ளார்.
ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் மன நல ஆலோசகர்கள் சில அறிவுரை வழங்கி வருகின்றனர் என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிடுகிறது.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !