சிகரெட் புகையை விட ஆபத்தானது ஊதுவர்த்தி புகை !





சிகரெட் புகையை விட ஆபத்தானது ஊதுவர்த்தி புகை !

0
உங்களது வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற் காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங் களை வணங்குவதற் காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள். 
சிகரெட் புகை


இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊது வர்த்தியை அதிகமாக பயன் படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும். 

ஊதுவர்த்தி யால் உடலுக்கு உண்டாகும் ஆபத்தான விளைவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

செல்களில் நச்சுத்தன்மை

ஊதுவர்த்தி யின் புகையானது செல்களில் நச்சுத் தன்மையை உண்டாக்கு கிறது. இது டி.என்.ஏ போன்ற மரபணு மூலக்கூறு களை மாற்றி யமைக்கலாம். இது புற்றுநோய் வளர்ச்சிக்கு பொருப்பாகிறது.

சுவாசக் கோளாறை உண்டாக்குகிறது ஊது வர்த்தியின் புகை சிலருக்கு இருமல் மற்றும் தும்மலை ஏற்படுத்துகிறது. 

இது சுவாசப் பாதைகளை நச்சுக்களை உருவாக்குகிறது. இதில் உள்ள நுண்ணிய நச்சுக்கள், மிகவும் ஆபத்தானவை.

நுரையிரல் பாதிப்பு

காற்று மாசுபடுவதி னால் நுரையிரலில் எரிச்சல் ஏற்படுகிறது. இது நுரையிரல் புற்று நோய்க்கான ஆபத்துகளை அதிகரிக்கலாம். மேலும் உடல் நலத்தையும் பாதிக்கிறது.

ஆஸ்துமா அறிகுறிகள்

காற்றை மாசுபடுத்தி, எரிச்சலூட்டு கிறது. ஆஸ்துமா நோய்க்கான அறிகுறி களை அதிகரிக்கிறது. இருமல் போன்ற வற்றிற்கு காரணமாக உள்ளது.

சரும பிரச்சனைகள்

உங்களுக்கு காற்று மாசுபாட்டினால் சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்றவை உண்டாகும் என்றால், ஊதுவர்த்தி புகை உங்களது சருமத்தின் ஆரோக்கி யத்தை இழக்கச் செய்யும். இது சில சரும பிரச்சனை களை உண்டாக்கும்.
சரும பிரச்சனைகள்


தள்ளியே இருங்கள்

நீங்கள் கர்ப்பமாக இருந்தால், ஊதுவர்த்தி புகையை விட்டு சற்று தள்ளியே இருங்கள். இந்த புகை உங்களது சுவாசம் வழியாக சென்று கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.

நரம்பியல் பிரச்சனை

ஊதுவர்த்தி யின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இதனை நீண்ட நாட்கள் சுவாசித்து கொண்டிருந் தால், நரம்பியல் பிரச்சனைகள் உண்டாகும். கற்றல் திறன் குறைபாடு மற்றும் நினை வாற்றல் குறையும்.

தலைவலி

நீங்கள் மன அமைதிக்கா கவும், தெய்வ காரியங்களுக் காகவும் பயன்படுத்தும் இந்த ஊதுவர்த்தி, உங்களுக்கு தலைவலி மற்று தலைசுற்றல் போன்ற பிரச்சனை களையும் கூட ஏற்படுத்தலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)