மகாராஷ்டிரா அரசியலில் சிக்கல் !

மகாராஷ்டிரா வில் கூட்டணி கட்சி அமைச்சர் களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அவர்களை அதிருப்தியில் ஆழ்த்தி யுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
மகாராஷ்டிரா அரசியலில்


மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பின்னர் ஆட்சி யமைப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தன. 

சுழற்சி முறையில் ஆட்சியை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட அதிகார பகிர்வு மோதலால் தேர்தலுக்கு முந்தைய பாஜக-சிவசேனா கூட்டணி உடைந்தது.

இதை யடுத்து நீண்ட இழுபறி களுக்கு பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சி களிடையே கூட்டணி இறுதியானது. 

தொடர்ந்து, இக்கட்சிகளுக் கிடையே கூட்டணியை வழிநடத்துவது தொடர்பாக ‘மகாராஷ்டிர வளர்ச்சி முன்னனி’ என்ற ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு குறைந்த பட்ச செயல் திட்டம் உருவாக்கப் பட்டது.

இதன் தொடர்ச்சி யாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். 

அவருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலா இருவர் அமைச்சர்க ளாக பொறுப்பேற்றனர். அதன்பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டது.


அதில், உத்தவ் தாக்கரேவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரே உள்பட கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்று அவர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப் பட்டது.

இந்நிலையில், கூட்டணி கட்சி அமைச்சர் களுக்கு முக்கியமற்ற துறைகள் ஒதுக்கப் பட்டுள்ள தாகவும், 

அமைச்சரவை கூட்டங்களின் போது இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பான ஏற்பாடுகளிலும் அவர்களிடையே அதிருப்தி எழுந்துள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.

அதன்படி, கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவருக்கு இதர பிற்படுத்தப் பட்டோர் நலன், உப்பு நில மேம்பாடு மற்றும் பூகம்ப மறுவாழ்வு துறைகள் ஒதுக்கப் பட்டுள்ளது. 

ஆனால், முக்கியமற்ற துறைகள் தனக்கு ஒதுக்கப் பட்டிருப்பதாக கூறி நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிகிறது. ஆனால், இது குறித்து அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. 

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர்களுள் இவரும் ஒருவர் என்பது கவனிக்கத் தக்கது.


அதே போல், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இருக்கைகள் ஒதுக்குவதில் காங்கிரஸ் மூத்த தலைவரும்,

முன்னாள் முதல்வருமான அசோக் சவான் மற்றும் தேசியவாத கங்கிரஸ் தலைவரும், 

முன்னாள் துணை முதல்வருமான சகன் புஜ்பால் ஆகிய இருவருக்கு மிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

ஆனால், இதனை மறுத்துள்ள புஜ்பால், சட்டப் பேரவையில் சவானுக்கான அறை இன்னும் தயாராக வில்லை. 

என்னுடைய அறையில் தான் அவர் இருக்கிறார். நானும் அவரும் இணைந்து தான் அமைச்சரவை கூட்டத்துக்கு சென்றோம் என தெரிவித்துள்ளார்.

வருவாய் துறை ஒதுக்கப் பட்டுள்ள சிவசேனாவின் அப்துல் சட்டார், தனக்கு கேபினட் அந்தஸ்து அமைச்சர் பதவி ஒதுக்கப்படா விட்டால் 

ராஜிநாமா செய்து விடுவதாக கடந்த வாரம் மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: