தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் - தாவிந்தர் சிங்கின் ஜனாதிபதி பதக்கம் பறிப்பு?

0
காஷ்மீரில் தீவிரவாதி களுக்கு அடைக்கலம் தருவதையே ஒரு சைடு பிசினஸ் போல செய்து வந்திருக்கிறார் காஷ்மீரில் பிடிபட்ட போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங். 
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்


இதனால் அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பதக்கம் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்ட குற்றவாளி களை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரிடம் சிக்கினார் ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங். 

2001 நாடாளுமன்ற தாக்குதல் வழக்கிலேயே தூக்கி லிடப்பட்ட அப்சல் குரு, தாவிந்தர்சிங் குறித்து குறிப்பிட் டிருந்தார்.

ஆனால் ஒரு தீவிரவாதி யின் வாக்குமூலத்தை நம்புவதா என ஐபி, ரா உள்ளிட்ட வற்றின் அதிகாரிகள் தாவிந்தர் சிங் விவகாரத்தை கண்டு கொள்ள வில்லை. 

2001 நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி களுக்கு டெல்லியில் தங்க ஏற்பாடு செய்ததும் தாவிந்தர் சிங்தான்.


ஜம்மு காஷ்மீரில் உயர் போலீஸ் அதிகாரி என்பதால் தீவிரவாதி களுக்கு அடைக்கலம் தருவதும்

அதற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் தாவிந்தர் சிங். 

பல தீவிரவாதி களை தமது வீட்டிலேயே தங்க வைத்தும் அதற்கும் பணம் வாங்கி யிருக்கிறார்.

தற்போது தாவிந்தர் சிங்குடன் சிக்கிய ஓட்டுநர், பாகிஸ்தானுக்கு 5 முறை சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதனை யடுத்து தாவிந்தர் சிங் உள்ளிட்டோரை ஐபி, ரா, என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருதுருவி விசாரிக்கின்றனர்.

இதனால் தாவிந்தர் சிங்குக்கு கடந்த ஆண்டு ஜனாதிபதி அளித்த பதக்கம் பறிக்கப்பட இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)