உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் போலீஸ் பிடியில் தவுபிக், அப்துல் !

0
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி யிலிருந்து, அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 
உதவி ஆய்வாளர் கொலை


இந்நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை அதிகாரி ஒருவரையே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

களியக்கா விளையைச் சேர்ந்த காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த ஜனவரி 8ஆம் தேதி சோதனைச் சாவடியில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கொலையை அரங்கேற்றி யவர்கள் தவுபிக், அப்துல் என்பது தெரிய வந்தது.

இருவரையும் பிடிக்க தமிழ்நாடு, கேரள, கர்நாடக காவல்துறை ஆகியவை முழுவீச்சில் செயல்பட்டன. 

இவர்களது கூட்டாளிகள், ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.

இருப்பினும் தப்பியோடிய தவுபிக், அப்துல் ஆகியோரைப் பிடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் இவர்களுக்கு மும்பையில் இருந்து துப்பாக்கி வாங்கிக் கொடுத்த பாட்ஷா கைது செய்யப் பட்டார். 

கேரள மாநிலம் நெய்யாற்றங் கரையில் இருவரும் கொலைக்காக திட்டமிட்ட தாக சிசிடிவி காட்சியையும் கேரள போலீஸ் வெளி யிட்டிருந்தது.

தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் அளித்த தகவலின் படி, கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற் குரிய வகையில் இருந்த தவுபிக், அப்துல் ஆகிய இருவரையும் அம்மாநில போலீஸார் கைது செய்தனர்.


இவர்கள் இந்தக் கொலையை தனிப்பட்ட பழி வாங்கலுக் காக செய்தனரா,

வேறு ஏதேனும் தீவிரவாதத் திட்டமிடல் நோக்கில் செய்தார்களா என்ற நோக்கில் விசாரிக்கப்பட்டு வந்தனர். 

இந்நிலையில் இன்று இருவரும் தமிழ்நாடு காவல்துறை வசம் ஒப்படைக்கப் பட்டனர்.

இதனால் மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற வுள்ளது.

கைது செய்யப் பட்டவர்களுக்கு தீவிரவாத அமைப்பு களுடன் தொடர்பு இருப்பது உறுதி யானால் வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட வாய்ப்புள்ள தாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)