மக்கர் செய்த மெர்சிடாஸை ஹெலிகாப்டர் வைத்து நொறுக்கியவர் !

0
அந்த வீடியொவில் சுமார்ட் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கனவு காரை உடைப்ப தாகத் தெரிவித்துள்ளார்.
மக்கர் செய்த மெர்சிடாஸை ஹெலிகாப்டர் வைத்து நொறுக்கியவர் !

ரஷ்யாவைச் சேர்ந்த இகோர் மொராஸ் என்பவர் தான் ஆசையாக வாங்கிய மெர்சிடிஸ் எஸ்.யூ.வி காரை ஹெலிகாப்டர் வைத்து தூக்கி கீழே எறிந்து நொறுக்கி யுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் இகோர் மொராஸ். யூட்யூபராக உள்ளார்.

ஆசையாக வாங்கிய மெர்சிடிஸ் காரை ஓட்டிப் பார்க்கும் போது தொழில் நுட்பக் கோளாறுக ளால் கார் மக்கர் செய்துள்ளது. 

இதனால் கடுப்பான இகோர் தனது காரை ஹெலிகாப்டரில் தூக்கி 1,000 அடி உயரத்தி லிருந்து கீழே விட்டு நொறுக்கி யுள்ளார்.

காரை நொறுக்குவதை 7 நிமிட வீடியோவாக எடுத்த இகோர் அந்த வீடியோவில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கனவு காரை உடைப்பதாகத் தெரிவித்துள்ளார். 

ஆனால், உள்ளூர் செய்திகளில் இகோர் தனது நண்பர் ஒருவருடன் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படை யிலேயே காரை நொறுக்கி வீடியோவாக வெளி யிட்டுள்ளார் எனக் கூறப்படு கிறது.
சுமார் 7 லட்சம் பார்வை யாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ ரஷ்யாவில் வைரலாகி உள்ளது. இவ்விவகார த்தை ரஷ்ய போலீஸார் வழக்காக எடுத்துக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings