சபரிமலைக்கு வரும் குடியரசுத் தலைவர்.. கோயில் அருகே ஹெலிபேட்?

0
சபரிமலை ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்ய சரிமலைக் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் ஜனவரி 5ம் தேதி வருகிறார். 
சபரிமலைக்கு வரும் குடியரசுத் தலைவர்


அவருக்காக கோயில் அருகே ஹெலிபேட் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் தமிழ் மாதமான கார்த்திகை மற்றும் மார்கழியில் முழுமையாக திறந்திருக்கும். 

தைமாதம் முதல் வாரம் திறந்திருக்கும் மற்றபடி ஒவ்வொரு தமிம் மாதத்தின் முதல் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே திறக்கப்படும்.

கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சன்னதி முழுமையாக திறக்கப்டும் என்பதால் அந்த சமயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசிக்க வருவார்கள்.

இந்நிலையில் மண்டல விளக்கு பூஜை கடந்த டிசம்பர் 27ம் தேதி ஐயப்பன் கோவிலில் நடந்தது. அதன்பிறகு நடை சாத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப் பட்டுள்ளது. வரும் ஜனவரி 21ம் தேதி வரை திறந்திருக்கும்.


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வரும் ஜனவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வருகை தர விரும்புகிறார். 

இதற்காக கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் அதிகாரிகள் குழு பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியது. 

கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை சன்னிதானம் அருகேயே தரையிறங்க வாய்ப்பு உள்ளதாம். 

அவருக்காக ஹெலிபேட் அமைத்து அதில் தரையிறங்க ஏற்பாடுகள் நடக்கிறதாம். 

சன்னிதானம் அருகே ஹெலிபேட் அமைக்கப் பட்டால் அப்படியே நடந்து சென்று சுவாமியை எளிதாக குடியரசுத் தலைவரால் தரிசனம் செய்ய முடியும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings