புத்தாண்டு நாளில் ஷாக் கொடுத்த வடகொரியா அதிபர் !

0
இந்த உலகம் புதிய ஆயுதத்தை பார்க்க போகிறது என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மிரட்டி உள்ளார். புத்தாண்டி யொட்டி இன்று அமெரிக்காவை எச்சரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புத்தாண்டு நாளில் ஷாக் கொடுத்த வடகொரியா அதிபர் !


நிறுத்தி வைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடரப் போவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் கிறிஸ்துமஸ் பரிசை அமெரிக்கா வுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்த ஒரு வாரத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டி ருக்கிறார். 

இவரது இந்த பேச்சு அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அணு ஆயுத சோதனை

அமெரிக்காவும், வடகொரியாவும் சிந்தாந்த ரீதியாக மோதிக் கொள்கின்றன. இதனால் இரு நாடுகளும் தீராத பகையாளியைப் போல் இருப்பது உலகம் அறிந்த உண்மை. 

வடகொரியா வின் அணு ஆயுத சோதனைகள் அமெரிக்காவின் நட்பு நாடான தென் கொரியாவும் மற்றும் அமெரிக்காவு க்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

ஆனாலும் சோதனை

வடகொரியாவை வழிக்கு கொண்டுவர பலமுறை பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறது அமெரிக்கா.

ஆனால் இதை எல்லாம் கொஞ்சமும் சட்டை பண்ணாத வடகொரியா அதிபர் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அடிக்கடி அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தி வருகிறார்.

மிரட்டி பணிய வைத்தார்

இந்த பிரச்னையால் கொதித்தெழுந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கிம் ஜாங்க் உன்னுக்கு எதிராக ஆவேசமாக பேசியிருக்கிறார். 

எனினும் ஒரு வழியாக உருட்டி மிரட்டிய காரணத்தால், அணு ஆயுத சோதனைகள் செய்வதில் இருந்து சிறிது காலம் வடகொரியா பின்வாங்கி இருந்தது

டிரம்ப் அதிரடி
புத்தாண்டு நாளில் ஷாக் கொடுத்த வடகொரியா அதிபர் !


அதேநேரம் வடகொரியா அதிபர் கிம், தங்கள் நாடு மீது விதித்த தடைகளை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 

அதற்கு டிரம்ப், உங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை முழுமையாக ஒப்படைத்தால் பரிசீலிக்கிறோம் என்று கூறி வருகிறார்.

கிம் கோபம்

இதனால் கடுப்பான வடகொரியா அதிபர் கிம் ஜாங்க் உன், இனியும் பொறுமை காப்பதில் அர்த்தமில்லை என்று வடகொரியா ராணுவ அதிகாரிகளிடம் கூறிவிட்டு பல அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

மீண்டும் சோதனை

கடந்த வாரம் கிம் பேசுகையில் கிறிஸ்துமஸ் பரிசு அமெரிக்காவு க்கு அனுப்பப்படும் என்று கூறியிருந்தார். 
அப்படி கூறிய ஒரு வாரத்தில் இப்போது, நிறுத்தி வைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடரப் போவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். 

இதன் மூலம் இந்த உலகம் புதிய ஆயுததத்தை பார்க்க போகிறது என்றும் கூறியுள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings