உரியவர்களிடம் ஒப்படைக்காத தபால்கள் குப்பையில் குவிப்பு !

0
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தியாகேசர் ஆலை பள்ளி வளாகத்தில் கிடக்கும் குப்பையில் அதிக அளவிலான உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் படாத தபால்கள் குவிந்து கிடந்தது. இதில் அதிகளவு தபால்கள் எரிக்கப்பட்டு உள்ளது.
தபால்கள் குப்பையில் குவிப்பு


குப்பையில் கிடக்கும் தபால்களில் அதிகளவு புதுக்கோட்டை மாவட்டம் ஒளிய மங்கலம், பொன்னமராவதி, திருமயம் ஆகிய பகுதிகளு க்கு 

உரிய நபர்களிடம் வழங்க வேண்டிய எல்.ஐ.சி, தபால்கள், தனியார் வங்கி தபால்கள், தனியார் இன்சூரன்ஸ் தபால்கள், பள்ளி மாணவர்க ளுக்கு கொடுக்க வேண்டிய தபால் அட்டைகள், 

அரசுப்பணி சம்மந்தமான தபால்கள், வருமான வரித்துறை அலுவலக தபால்கள் என பல்வேறு துறை தபால்கள் கொட்டிக் கிடக்கின்றது.

இந்த தபால்களில் கடந்த 2018 ம் ஆண்டு மற்றும் அந்த ஆண்டுக் கான சில மாதங்களின் தேதிகள் குறிப்பிடப் பட்டுள்ளது. 

உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் படாமல் குப்பையில் கொட்டிக் கிடக்கும் தபால்களை கண்ட சிலர் மணப்பாறை அஞ்சலக அலுவலக த்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் கணேசன் மற்றும் அதிகாரிகள் குப்பையில் கிடக்கும் தபால்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உரிய நபர்களிடம் சரியான நேரத்தில் போய்சேராத இந்த தபால்க ளால் அவர்கள் அந்த நேரத்தில் நேர்ந்த இன்னல்கள் குறித்தும், 

இது போன்ற அசாதாரண மாக நடக்கும் தபால் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings