திருடருக்கு கேரள ஆசிரியர்களின் உருக்கமான கடிதம் !

கேரள மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 
திருடருக்கு கேரள ஆசிரியர்களின் கடிதம்


அரசு நிதியுதவி பெறும் இந்த பள்ளியில் 640 மாணவ -மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் 44 பேர் பணி புரிகின்றனர்.

இந்த பள்ளியில் 7 மாதங்களு க்கு முன்பு ஒரு திருட்டு சம்பவம் நடந்தது.

பூட்டை உடைத்து தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்த மர்ம மனிதன், அங்கிருந்த ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கேமரா ஆகிய வற்றை திருடிச் சென்று விட்டான். 

அது பற்றி போலீசில் தலைமை ஆசிரியர் புகார் செய்தார். ஆனால் அந்த வழக்கில் போலீசாரிடம் இதுவரை திருடன் சிக்கவே இல்லை. அதன் பிறகு பள்ளியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப் பட்டது.

இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் ஏற்கனவே நடந்தது போலவே மீண்டும் தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்து திருட்டு சம்பவம் நடந்து உள்ளது. 

இப்போது 3 மடிக்கணினிகள், ஒரு ‘பென் டிரைவ்’ கருவி, சி.சி.டி.வி.யில் பொருத்தப் பட்டிருந்த ‘ஹார்டு டிஸ்க்’ மென்பொருள் ஆகிய வற்றை மர்ம ஆசாமி எடுத்துச் சென்று விட்டான்.
அவன் திருடிய ‘பென் டிரைவ்’ கருவியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த வருகைப் பதிவேடு அடங்கி உள்ளது. 

தனது தோற்றம் பதிவாகி இருக்கும் என்பதால் கண்காணிப்பு கேமராவின் ‘ஹார்டு டிஸ்க்’ கையும் எடுத்துச் சென்று விட்டான். 

இந்த திருட்டு சம்பவம் குறித்தும் தலைமை ஆசிரியர் தலச்சேரி போலீசில் முறைப்படி மீண்டும் புகார் செய்தார்.

இந்த நிலையில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கூடி திருட்டு சம்பவம் பற்றி பேசி ஆலோசித்தனர். திருடனை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஒரே நபர் தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும், தொழில் நுட்பம் தெரிந்த அவன் மீண்டும் திருடாமல் இருக்க வேண்டும் என்பதற் காக, திருடனுக்கு ஒரு கடிதம் தயாரித்து சமூக வலைத்தளம் மூலமாக பரவ விடுவோம். 

எப்படியும் அவனுக்கு தகவல் எட்டி விடும் என்று முடிவு செய்து ஒரு கடிதம் எழுதி வலைத்தளத்தில் பதிவிட்டனர்.


அந்த கடிதம் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த கடிதம் விவரம் வருமாறு:

அன்புள்ள திருடனுக்கு, நீ யார் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் நீதான் மீண்டும் வந்து எங்கள் பள்ளியில் திருடி உள்ளாய். 7 மாதங்களுக்கு முன்பும் வந்தாய். 
இப்போது மீண்டும் வந்து கைவரிசையை காட்டி இருக்கிறாய். இது மோசமான செயல். முன்பு ரூ.40 ஆயிரம் பணம், மாணவர்களுக் கான கேமராவை எடுத்துச் சென்றாய். போலீசாரால் உன்னை கண்டுபிடிக்க முடிய வில்லை.

மீண்டும் இந்த முறையும் நீதான் இந்த காரியத்தை செய்திருக்க வேண்டும். சி.சி.டி.வி. கேமராவில் உனது காட்சி பதிவாகி இருக்கும் என்று நினைத்து அதன் ஹார்டு டிஸ்க்கை எடுத்துச் சென்று விட்டாய். 

ஆனால் ‘டிஜிட்டல் சிக்னேச்சர்’ அடங்கிய பென் டிரைவையும் எடுத்து போய் விட்டாய். அது உனக்கு பயன்படாது. எனவே அதை திருப்பி கொண்டு வந்து வைத்து விடு. 

அதில் உள்ள வருகைப் பதிவேடு படிதான் எங்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள். அந்த கருவி இல்லாததால் எங்களுக்கு இந்த மாத சம்பளம் கிடைக்காது. 

வீட்டு செலவுக்கு பணம் வேண்டும். பெரியவர் களுக்கு மருந்து வாங்க வேண்டும். கடனுக்கான வட்டி கட்ட வேண்டும். இல்லை யென்றால் அபராத வட்டி போடுவார்கள். 


எனவே அந்த ‘பென் டிரைவ்’ஐ மட்டும் திருப்பி கொண்டு வந்து வைத்து விடு. இனிமேல் பள்ளிக் கூடத்தில் திருடாதே.

வேறு வேலை செய்து உழைத்து வாழ கற்றுக்கொள்.

இவ்வாறு ஆசிரியர்கள் அந்த கடிதத்தில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

ஆசிரியர்க ளின் இந்த பதிவு அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் போலீசும் திருடனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்பதையும் மறை முகமாக சுட்டிக் காண்பித்து இருக்கிறது.
எது, எப்படியோ பள்ளிக் கூடத்துக்கான வருகைப் பதிவேடு அடங்கிய ‘பென் டிரைவ்’ திருப்பி கிடைத்தால் சரி தான்.
Tags:
Privacy and cookie settings