ஆளும் கட்சிக்கு இது ஒரு அபாய மணி - டி. ராஜேந்தர் !

0
சென்னை தியாகராய நகரில் தனது வீட்டில் செய்தியாளர் களை சந்தித்த டி.ராஜேந்தர் பேசுகையில் நேற்றைய பொழுது 
ஆளும் கட்சிக்கு இது ஒரு அபாய மணி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டத்திற் கான திரைப்பட வினியோகஸ்தர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நேற்று பதவி ஏற்றதாக தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் நடிகராக, அரசியல் கட்சி தலைவராக இருந்த டி.ராஜேந்தர் வேறு, இப்போது இருக்கிற டி.ராஜேந்திரன் வேறு.

திரையுலக வாழ்க்கையில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படம் வந்தாலும் சிக்கல். அன்று வர்தகசபை வாசலில் நின்று ஜி.எஸ்.டி வரி எதிர்த்து போராடினேன். 

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்த பிறகு மாநில அரசு கேளிக்கை வரியை எதற்காக விதிக்கிறது என்று கேள்வி எழும்பினேன். 

இந்திய அளவில் இல்லாதவாறு 8 சதவீதம் கேளிக்கை வரி மக்களை வாட்டி வதக்கிறது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

தட்டுக்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு நாதர் சொன்னது போல, தமிழக முதல்வர், துணை முதல்வர், செய்தித்துறை அமைச்சரையும் கேளிக்கை வரி தொடர்பாக சந்தித்து பேச நேரம் கேட்டு இருக்கின்றோம்.

தர்பார் படத்தின் டிக்கெட் விலை குறித்த கேள்விக்கு என்னால் கருத்து சொல்ல முடியாது என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார். 

மேலும், கமல், விஜய், அஜித் படங்களுக்கும் டிக்கெட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அது தான் என்னுடைய நோக்கம். 

தமிழ் சினிமாவை மறுகட்டமைப்பு செய்ய என்னால் மட்டும் முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு மற்றும் திரைப்படத் துறையில் இருப்பவர் களை எங்களை எதிராகவும், உதிரியாகவும் எண்ணக் கூடாது. 

திரைப்பட திரையரங்குகள் மூட வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டி.ராஜேந்தர், உள்ளாட்சி தேர்தலில் முடிவுக்களில் ஆளும் கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களை வென்று வருகிறது. 

இப்போது, மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர்.ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவு என்பது அபாய மணி, அபாய சங்கு என்றும் அரசியலிலுக்கு அதிஷ்டம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings