ஈரானின் புது மேஜர் ஜெனரல் - முதல் நாளே ஏவுகணை தாக்குதல் !

0
ஈரானின் புது குவாட்ஸ் படை ஜெனரலாக பதவி ஏற்று இருக்கும் இஸ்மாயில் குவானி, பதவி ஏற்ற முதல் நாளே அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளார். 
ஈரானின் புது மேஜர் ஜெனரல்


அவர் முதல் வேலையாக இன்று அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல் நடத்தினார்.

ஈரான் - அமெரிக்கா இடையில் மீண்டும் போர் வருவதற்கான சூழ்நிலைகள் நிலவி வருகிறது. 

அமெரிக்கா விலகிச் சென்றாலும் ஈரான் கண்டிப்பாக அமெரிக்காவை தாக்கும் திட்டத்தில் இருக்கிறது.

கடந்த சில வாரம் மஜூன் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குவாஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப் பட்டார். 

இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

என்ன பதிலடி

அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் நடத்தப் பட்டது ஜனவரி 3ம் தேதி. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் வரிசையாக இரண்டு முறை அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியது. 

முதல் முறை ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் 12 ஏவுகணை களை வீசி தாக்குதல் நடத்தியது.

தூதரகம்


அதன்பின் மீண்டும் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே இரண்டு ஏவுகணை களை வீசி தாக்குதல் நடத்தியது.

ஆனால் இந்த இரண்டு தாக்குதலி லும் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. 

ஆனால் இந்த தாக்குதல் காரணமாக ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் நொறுங்கி விழுந்து 170 பேர் பலியானார்கள்.

அமைதியாக இருந்தது

இதை யடுத்து ஈரான் - அமெரிக்கா இரண்டு நாடுகளும் எந்த விதமான தாக்குதலும் நடத்தாமல் அமைதி காத்து வந்தனர். 
இந்த நிலையில் தான் இன்று ஈரானின் புதிய குவாட்ஸ் படை தளபதியாக இஸ்மாயில் குவானி, பதவி ஏற்றுள்ளார். 

அவர் பதவி ஏற்று 6 மணி நேரம்தான் ஆகிறது. இவர் கொல்லப்பட்ட தளபதி சுலைமானி க்கு மிகவும் நெருக்க மானவர்.

பழி வாங்குகிறார்

இவர் பதவி ஏற்று 6 மணி நேரத்தில் தற்போது மீண்டும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல் நடத்தி உள்ளார். 

மொத்தம் மூன்று ஏவுகணை களை விட்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். ஆனால் இந்த தாக்குதலில் யாரும் பலியானதாக தகவல் வெளியாக வில்லை.

என்ன சொன்னார்


இந்த தாக்குதல் குறித்து இஸ்மாயில் குவானி கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் சுலைமானி கொலைக்கு பழி வாங்கி தீருவோம். 

மிகவும் நேர்மையான முறையில், நேருக்கு நேர் பழி வாங்குவோம். அமெரிக்கா போல மறைந்திருந்து, டிரோன் தாக்குதல் நடத்த மாட்டோம்.

உலக நாடுகள்

அவர்கள் எங்களை கோழைகள் போல தாக்கினார்கள். நாங்கள் சுலைமானி ரத்தத்திற்கு பதிலடி கொடுப்போம். 
உலகில் இருக்கும் மற்ற நாடுகளின் உதவியுடன் கண்டிப்பாக நாங்கள் மிகப்பெரிய பதிலடியை கொடுப்போம், என்று இஸ்மாயில் குவானி தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)