பிரம்மாண்டமாக ஏர் உழும் உழவன் - உலக சாதனை !

0
தமிழகத்தில் நாளை பொங்கல் திருவிழா தொடங்குகிறது. முதல் நாளாக போகி பண்டிகை கொண்டாடப் படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கூற்றிற்கு ஏற்ப வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவர்.
பிரம்மாண்டமாக ஏர் உழும் உழவன்


இதனை யடுத்து தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என வரிசையாக திருவிழா களை கட்டுகிறது.

உழவு செய்ய உதவிய சூரியனு க்கும், பிற உயிர்களு க்கும் நன்றி சொல்லும் நாளாக இந்த பண்டிகை கொண்டாடப் படுகிறது.

பொது மக்கள் புதுப்பானையில் புத்தரிசி போட்டு பொங்கலிட்டு மகிழ்ச்சி கொள்வர். அன்றைய தினம் புத்தாடை உடுத்தி உற்சாகமாக இருப்பர். 

பொங்கல் திருநாளை ஒட்டி பள்ளிகள், கல்லூரிகளில் முன்னதாகவே கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 


அதாவது விவசாயி களை கவுரவிக்கும் விதமாக எருதுகள் பூட்டி நிலத்தில் ஏர் உழுவது போன்ற வடிவில் மாணவ, மாணவிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் நின்றனர்.

இதில் மூன்றா யிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை உலக சாதனை புத்தகத்தில் பதிவிடு வதற்காக சம்பந்தப்பட்ட அமைப்பினர் வந்திருந்தனர். 

அவர்கள் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதை யடுத்து சிறந்த விவசாயி களுக்கு பரிசுகளும், சான்றிதழ் களும் வழங்கப் பட்டன. 

இந்த உலக சாதனை முயற்சியின் தொடக்கமாக பறை இசை, பரதம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப் பட்டன. இதனை ஏராளமான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)