சுங்கச்சாவடியில் காவலர் இரும்புக் கம்பியால் அடித்து கொலை !

0
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப் பட்டார். 
காவலர் அடித்து கொலை


இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்

அப்துல் சமீம், தவ்பீக் உள்ளட்ட தீவிரவாதி களை போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்ற திவிரவாதி களுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட முகமது அலி, முகமது அமீர், பிச்சைக்கனி, சேக்தாவூத் ஆகிய 4 பேரை 
ராமநாதபுரத்தில் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நான்கு பேர் மீதும் உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி மெயின் ரோடு சாலையில் கொள்ளையர் களால் சுங்கச்சாவடி காவலர் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார். 

லாரி ஓட்டுனரிடம் செல்போனை பறித்த போது இரண்டு கொள்ளையர் களை தடுக்க முயன்ற காவலர் இரும்புக் கம்பியால் அடித்து கொலை, 
சுங்கச்சாவடி காவலர் வெங்கடேசனை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி யில் சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சுங்கச்சாவடி காவலர் வெங்கடேசனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings