மூச்சுக் குழாய்க்குள் சிக்கிய மூக்குத்தியை எடுத்து அரசு மருத்துவர்கள் சாதனை !

0
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பட்டம்மாள் விடுதியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி புஷ்பம் (55) வறட்டு இருமலால் சிரமப்பட்டு வந்துள்ளார். 
அரசு மருத்துவர்கள் சாதனை

இதற்காக பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சைக்கு பலன் கிடைக்க வில்லை.

கடந்த ஒரு வாரமாக இருமும் போது சளியில் ரத்தம் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி யடைந்த அவர் உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். 

அவரை மருத்துவர்கள் எக்ஸ்ரே மூலம் தீவிர பரிசோதனை செய்தனர். அதில் வலதுபுறம் நடுப்பகுதிக்கு செல்லும் மூச்சுக் குழாயில் சிறிய ஆணி போன்ற பொருள் அடைத்திருப் பதைக் கண்டனர். 

உடனே சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் அது மூக்குத்தியில் உள்ள திருகாணி என்று கண்டறிந்தனர். இதனை எடுப்பதற்காக மூச்சுக் குழாயில் அகநோக்கி இணை செலுத்தினர். 

ஒரு சிறிய இடுக்கி போன்ற கருவி மூலம் ஆணியின் நுனியை பிடித்துக் கொண்டனர். அப்படியே மெதுவாக வெளியே எடுத்து விட்டனர். தற்போது அந்த பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிகிச்சையை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் தாமோதரன், ஆனந்த் பாபு ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு செய்தது குறிப்பிடத் தக்கது. 

இது பற்றி பேசிய மீனாட்சி சுந்தரம், சாதாரண உலோகப் பொருட்கள் மூச்சுக் குழாயில் அடைத்துக் கொண்டால் உடனே இருமலும் தும்மலும் வரும்.

இதனால் அந்த பொருளை எளிதில் கண்டறிந்து விடலாம். ஆனால் புஷ்பாவின் மூக்குத்தி திருகாணி கழன்று மூச்சுக் குழாய்க்குள் சென்றுள்ளது. 

இதில் வலது நுரையீரலின் நடுப்பகுதிக்கு செல்லும் மூச்சுக் குழாயில் அடைத்துக் கொண்டது. வெளியேயும் வரவில்லை. உள்ளேயும் செல்ல வில்லை. 

இதனால் எந்தவித அறிகுறியும் இன்றி நோயாளி இருந்துள்ளார்.

வழக்கமாக இது போன்ற சிக்கலான தருணங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும். இதனால் நுரையீரல் பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம்.

இதற்கு இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும். ஆனால் தற்போது மூச்சுக் குழாய் வழியாக சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளோம். 

இனிமேல் மூச்சுக் குழாய்க்குள் எந்தவொரு பொருளும் செல்லாதவாறு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings