அணைக்கப்பட்ட மின்விளக்கு.. போலீஸின் தாமதம்? - ஜெ.என்.யு தாக்குதல் !

0
இந்தியாவின் தலை நகரமான டெல்லி, அதிகப் படியான மக்கள் நெருக்கம், புகையால் காற்று மாசு, போக்குவரத்து நெரிசல், கடுமையான பனிப்பொழிவு, அதிகமான வெப்பம் போன்ற பல்வேறு இடர்ப்பாடு களை எதிர் கொண்டு வருகிறது. 
ஜெ.என்.யு தாக்குதல்

இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம், டெல்லி சாலைகள் அனைத்தும் பல வருடங்களாக வாகனங் களை விட அதிகப் படியான போராட்டங் களை எதிர் கொண்டு வருகின்றன.

அரசியல் கட்சிகள், விவசாயிகள், பொது மக்கள், மாணவர்கள், பெண்கள் என டெல்லியில் போராடாத வர்களே இல்லை எனலாம். 

அந்தளவுக்கு இடைவிடாத போராட்டங் களைச் சந்தித்து வருகிறது இந்தியாவின் தலைநகரம். இந்தப் போராட்டங் களில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் தான் நாடு முழுவதும் எளிதில் பற்றிக் கொள்கிறது.

கடந்த மாதம் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் மொத்த நாட்டிலும் எதிரொலித்து பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்களும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். 

இந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ள தாக நினைப்பதற்குள் மற்றொரு சம்பவத்தால் ஸ்தம்பித்துள்ளது டெல்லி.

நேற்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த சில மர்ம நபர்கள், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி யுள்ளனர். 

இதைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஜெ.என்.யு என்றாலே போராட்டமும் போராட்ட குணமுடைய மாணவர்களும் தான் எனச் சமூகம் நினைக்கிறது. சொல்லப் போனால், மற்ற கல்வி நிறுவனங் களில் இல்லாத அளவு அதிகபட்ச போராட்டம் அங்கு நடக்கிறது. 

இந்தப் பல்கலைக் கழகத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்களும் வெளி நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். அதனால் அங்கு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களே அதிகம்.

இந்நிலையில், இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் தங்கும் விடுதிக்கான கட்டணம் எக்கச்சக்க மாக உயர்த்தப் பட்டது. இது அனைத்து தரப்பு மாணவர்கள் மத்தியிலும் வெறுப்பை உண்டாக்கியது. 
போலீஸின் தாமதம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களும் இதர மாணவர்களும் ஒன்றிணைந்து ஒட்டு மொத்த பல்கலைக்கழக வகுப்பு களையும் புறக்கணித்து போராட்ட த்தில் ஈடுபட்டனர். 

சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக ஜெ.என்.யு பல்கலைக் கழகத்தில் உள்ள இரு தரப்பு மாணவர் களுக்கு இடையே நீண்ட நாள்களாக பிரச்னை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடை யில் முகங்களை மூடியவாறு நேற்று பல்கலைக் கழகத்துக்குள் உள்ள விடுதியில் நுழைந்த 50 மர்ம நபர்கள், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண் மூடித்தனமான தாக்குதலை நடத்தி யுள்ளனர். 

இதில் ஜெ.என்.யு மாணவர் அமைப்புத் தலைவரான அய்ஷி கோஷ், மாணவர்கள், ஆசிரியர்கள் என 34 பேர் படுகாய மடைந்துள்ளனர். 

இந்தச் சம்பவத்துக்கு பல்கலைக் கழகத்தில் இருக்கும் இடதுசாரி மாணவர்கள் அமைப்பும் பா.ஜ.க மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றன.

ஜெ.என்.யு-வில் நடந்த தாக்குததைத் தொடர்ந்து, சாலைக்கு வந்த மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர். 

இதே பிரச்னையைக் கண்டித்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நேற்று இரவு டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், தாக்குதல் நடத்தி யவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதை யடுத்து இன்று காலைதான் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது டெல்லி காவல்துறை. தாக்குதல் நடத்தியவர் களில் சிலர் அடையாளம் காணப் பட்டுள்ளதாக வும் கூறப் பட்டுள்ளது.

இதற்கு மாணவர்களே காரணம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. 

விடுதிக் கட்டணம் தொடர்பான பிரச்னை ஏற்கெனவே நடந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் புதிய மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற் காக வந்ததாகவும், 

கட்டணத்தை எதிர்க்கும் மாணவர்கள் அவர்களைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட பிரச்னையில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே இரு மாணவர்கள் அமைப்புகள் ஒருவரை ஒருவர் தாக்கி வந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாகவே விடுதியில் தாக்குதல் நடந்துள்ள தாகவும் பல்கலைக் கழகத் தரப்பில் கூறப்பட் டுள்ளது. ஆனால், நேற்று நடந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியாக வில்லை.

இந்நிலையில், நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுவதாக மாணவர்கள் தெரிவித் துள்ளனர்.

அவர்கள் பேசும்போது, ``எப்போதும் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் வாகனங்களின் வருகையைக் கண்காணிப் பதற்காகப் பாதுகாப்பு காவலர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். 
அணைக்கப்பட்ட மின்விளக்கு

வளாகம், விடுதி என அனைத்து இடங்களிலும் காவலர்கள் இருப்பார்கள்,

ஆனால், நேற்று மாலை 6.45 மணிக்கெல்லாம் மர்ம கும்பல் விடுதிக்குள் நுழைந்தது. 

அந்த நேரத்தில் ஒரு பாதுகாப்பு காவலர்கள்கூட இல்லை அவர்கள் எங்கு சென்றனர்.

ஒரு வேளை அவர்கள் சம்பவ இடத்தில் இருந்திருந்தால் ஏன் தாக்குதலைத் தடுக்க வில்லை?

தாக்குதல் நடந்து 3 மணி நேரத்துக்குப் பிறகுதான் பல்கலைக்கழக வளாகத்து க்குள் காவலர்கள் வந்தனர், 

அப்போதும் அந்த மர்ம கும்பல் வளாகத்துக் குள்ளேயே தைரியமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. காவலர்கள் ஏன் அவர்களைப் பிடிக்க வில்லை, கைது செய்ய வில்லை?

மாலை 6.45-க்கு விடுதிக்குள் நுழைந்த கும்பல் 8 மணிக்கு மேல்தான் தாக்குதல் நடத்தியது. அது வரையில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். 

மேலும், தாக்குதல் நடந்த போது தெரு விளக்குகள் அனைத்தும் அணைக்கப் பட்டு விட்டன அது ஏன்... ஜெ.என்.யு-வில் இப்படி நடப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல” எனத் தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)