மழை வருமா? வராதா? - தமிழக வானிலை நிலவரம் !

0
இந்தியாவில் பருவ மழையை அதிகம் நம்பி யிருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. ஓராண்டில் பருவமழை பொய்த்துப் போனால் தமிழகத்தின் மழையின் அளவு வெகுவாக குறைந்து விடும்.
ழை வருமா? வராதா?


தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மழையில் 47% வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கிறது. இதை தவிர்த்து புயல், காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்கிறது.

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை அபரிமிதமாக வாரி வழங்கி யுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 1,000 மி.மீ மழை பதிவாகி நூற்றாண்டு சாதனையை நிகழ்த்தி யுள்ளது.

இதை யடுத்து தொடங்கிய வடகிழக்கு பருவ மழையும் நல்ல மழைப் பொழிவை அளித்துள்ளது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர் களை சந்தித்த வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழ்நாடு 

மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 
கரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு


சென்னை நகரில் அதிக பட்சமாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.

வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக 20ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித் துள்ளனர்.

எனவே அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர் பார்க்கலாம். காலநிலை மாற்றத்தால் அதிகப் படியான வறட்சியும், மித மிஞ்சிய மழைப் பொழிவும் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்து கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)