பொங்கல் பரிசு ஜன. 9 முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் - மறக்காதீர்கள் !

0
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக் கூடிய பணிகள் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும் என்று தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
பொங்கல் பரிசு ஜன. 9 முதல்


பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடும் வகையில்,

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமை யிலான தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்தப் பரிசு தொகுப்பு என்பது பொங்கல் பொங்க தேவைப்படக் கூடிய மூலப்பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பாகும்.

இது தவிர ஒவ்வொரு குடும்பத்து க்கும் ரூ 1000 ரொக்கம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டது. 

பொங்கல் பண்டிகையை கொண்டாட செலவாகும் என்பதால் இந்த ரொக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.

இது தொடர்பான நடைமுறைகள் பற்றி தமிழக அரசு இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் கூறியிருப்பதைப் பாருங்கள்:


ஜனவரி 9ம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக் கூடிய பணிகள் நிறைவடைய வேண்டும். 

ஒரு வேளை, பொங்கல் பரிசு, கிடைக்கப் பெறாத குடும்ப அட்டை தாரர்களுக்கு 13ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும், ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

குடும்ப அட்டை தாரர்கள், அந்த ரேஷன் கடைகளில் தங்களுக்குரிய பொங்கல் பரிசுத் தொகையை, பெறலாம்.

ரூ.1000 மற்றும் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இந்த தொகுப்பில் இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings