10 ரூபாய்க்கு வெங்காயம் மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு !

0
வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வரத்தொடங்கி யுள்ளதால், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப் பவர்கள், அதனை சந்தைக்கு கொண்டு வரத் தொடங்கி உள்ளனர். 
10 ரூபாய்க்கு வெங்காயம்


இதனால் வெங்காயத்தின் விலை தற்போது குறையத் தொடங்கி யுள்ளது.

கடலூரில் மட்டும் கடந்த சில நாட்களாக மிக குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப் படுகிறது. 

கடலூர் உழவர் சந்தையில் உள்ள ஒரு காய்கறி கடையில் பெங்களூரி லிருந்து வரவழைக்கப் பட்ட வெங்காயம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

போட்டி காரணமாக வெங்காயம் கிலோ ரு.10க்கு விற்கப்பட்டது. இதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகளவில் மக்கள் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)