பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை இல்லையா?

0
பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை பயமின்றி நம்பிக்கையுடன் எழுதும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 
பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை இல்லையா?


இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஜனவரி) 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பள்ளி மாணவர்க ளுடன் கலந்துரை யாடுகிறார். 

இதை தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர். 

இந்த நிலையில் அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

மேலும், இதற்கான ஏற்பாடு களை பள்ளிகளில் செய்து, மின்சாரம் தடைபடாமல் மாணவர்கள் அதனை கண்டு களிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.


இந்த உத்தரவால் திடீர் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15-ந்தேதி வருகிறது. 

அதற்கு மறுநாளான 16-ந்தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை நாள் ஆகும். 

அந்த நாளில் மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வந்து பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வேண்டும் என்பது போன்றே அந்த உத்தரவு உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings